• May 14 2025

கொத்மலை பிரதேச வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்த “கிளீன் ஸ்ரீலங்கா”

Chithra / May 14th 2025, 8:15 am
image


கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த பெருமளவானவர்கள் சிகிச்சைப் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள கொத்மலை பிரதேச வைத்தியசாலையின் வசதிகளை விரிவுபடுத்துவதுற்காகவும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக 'Clean SriLanka'திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. 

இதனூடாக, வைத்தியசாலை வார்டு அமைந்துள்ள பகுதிகளும், வைத்தியசாலை வளாகமும் சுத்தம் செய்யப்பட்டது. 

இந்த நடவடிக்கையானது நோயாளிகளின் சிகிச்சைக்கு வசதியான சூழலை உருவாக்குவதையும் ஏனைய வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாகும். 

குறைந்தபட்ச வசதிகள் இருந்த போதிலும், இந்த எதிர்பாராத சம்பவத்தின் போது காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை வழங்குவதில் கொத்மலை பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் காட்டிய அர்ப்பணிப்பை 'Clean SriLanka' செயலகம் பாராட்டியது.


கொத்மலை பிரதேச வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்த “கிளீன் ஸ்ரீலங்கா” கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த பெருமளவானவர்கள் சிகிச்சைப் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள கொத்மலை பிரதேச வைத்தியசாலையின் வசதிகளை விரிவுபடுத்துவதுற்காகவும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக 'Clean SriLanka'திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக, வைத்தியசாலை வார்டு அமைந்துள்ள பகுதிகளும், வைத்தியசாலை வளாகமும் சுத்தம் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையானது நோயாளிகளின் சிகிச்சைக்கு வசதியான சூழலை உருவாக்குவதையும் ஏனைய வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாகும். குறைந்தபட்ச வசதிகள் இருந்த போதிலும், இந்த எதிர்பாராத சம்பவத்தின் போது காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை வழங்குவதில் கொத்மலை பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் காட்டிய அர்ப்பணிப்பை 'Clean SriLanka' செயலகம் பாராட்டியது.

Advertisement

Advertisement

Advertisement