மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில் நேற்று(19) மாலை இடம்பெற்ற கூட்டத்தில், கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மதிப்பிடப்பட்ட அரிசியை விட இரண்டு மடங்கு அரிசித் தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளது. ஆகையால் மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருமாயின் நாடு பின்னோக்கி செல்லும் என பலர் கூறினார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் பாதுகாப்புக்காக வருடாந்தம் 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
தற்போது, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையும் போதுமானது அல்ல என கூறி வந்தால், அவர்களுக்கான மொத்த பாதுகாப்பும் நீக்கப்படும். என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்படஇடமளிக்கப்படாது - ஜனாதிபதி அநுர உறுதி மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில் நேற்று(19) மாலை இடம்பெற்ற கூட்டத்தில், கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது மதிப்பிடப்பட்ட அரிசியை விட இரண்டு மடங்கு அரிசித் தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளது. ஆகையால் மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாதுதேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருமாயின் நாடு பின்னோக்கி செல்லும் என பலர் கூறினார்கள். முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் பாதுகாப்புக்காக வருடாந்தம் 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. குறித்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையும் போதுமானது அல்ல என கூறி வந்தால், அவர்களுக்கான மொத்த பாதுகாப்பும் நீக்கப்படும். என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.