பல்கலைக்கழக மாணவி போன்று நடித்து சட்ட பீடத்தின் பெண் பேராசிரியை ஒருவரின் கைப்பையில் இருந்து பதிமூன்றாயிரம் ரூபாவை திருடிய இளைஞன் குருதுவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்திய நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதி தொடக்கம் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் அனுராதபுரத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகநபர் கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசித்து, அனுமதியின்றி பெண்கள் கழிவறைக்குள் நுழைந்து பல பொருட்களை திருடியுள்ளார்.
இந்த சந்தேக நபருக்கு பல நீதிமன்றங்களில் திருட்டு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குருதுவத்தை பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவி போன்று வேடமணிந்து பெண் பேராசிரியரின் பையுக்குள் கைவிட்ட திருடன். samugammedia பல்கலைக்கழக மாணவி போன்று நடித்து சட்ட பீடத்தின் பெண் பேராசிரியை ஒருவரின் கைப்பையில் இருந்து பதிமூன்றாயிரம் ரூபாவை திருடிய இளைஞன் குருதுவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்திய நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதி தொடக்கம் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.சந்தேகநபர் அனுராதபுரத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை சந்தேகநபர் கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசித்து, அனுமதியின்றி பெண்கள் கழிவறைக்குள் நுழைந்து பல பொருட்களை திருடியுள்ளார்.இந்த சந்தேக நபருக்கு பல நீதிமன்றங்களில் திருட்டு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குருதுவத்தை பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.