• Mar 16 2025

ஏறாவூர் நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கள்வர்கள் கைவரிசை - சீசீரிவியில் சிக்கிய காட்சிகள்

Chithra / Mar 15th 2025, 8:03 am
image


மட்டக்களப்பு – ஏறாவூர்  ரிசி  குவாட்டஸ் பகுதியில் அமைந்துள்ள நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தின் தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டு சிலைகள், பூஜைப் பொருட்கள் என்பன களவாடப்பட்டுள்ளதுடன், ஆலயத்தின் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 01.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அங்கிருந்த சீசீரீவி கமராவிலும் குறித்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

ஆலய மூலஸ்தானத்தினுள் இருந்த வெண்கலத்தினாலான நாக சிலை, பிள்ளயைளார் சிலை, விளக்குகள் உள்ளிட்ட பூஜைப் பொருட்களுடன், உண்டியலும் இனம் தெரியாத நபர்களினால் திருடப்படுள்ளது.

இதேவேளை ஆலயத்தில் களவாடப்பட்ட உண்டியல், ஆலயத்தின் முன் பக்க வளாகம் ஒன்றினுள் கிடப்பதை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.

இதுவரை திருட்டு சம்பவம் தொடர்பாக எவரும் இனம்கானப்படவில்லை என்பதுடன், இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலும் ஆலய நிர்வாகத்தினரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 


ஏறாவூர் நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கள்வர்கள் கைவரிசை - சீசீரிவியில் சிக்கிய காட்சிகள் மட்டக்களப்பு – ஏறாவூர்  ரிசி  குவாட்டஸ் பகுதியில் அமைந்துள்ள நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தின் தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டு சிலைகள், பூஜைப் பொருட்கள் என்பன களவாடப்பட்டுள்ளதுடன், ஆலயத்தின் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.நேற்று அதிகாலை 01.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அங்கிருந்த சீசீரீவி கமராவிலும் குறித்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.ஆலய மூலஸ்தானத்தினுள் இருந்த வெண்கலத்தினாலான நாக சிலை, பிள்ளயைளார் சிலை, விளக்குகள் உள்ளிட்ட பூஜைப் பொருட்களுடன், உண்டியலும் இனம் தெரியாத நபர்களினால் திருடப்படுள்ளது.இதேவேளை ஆலயத்தில் களவாடப்பட்ட உண்டியல், ஆலயத்தின் முன் பக்க வளாகம் ஒன்றினுள் கிடப்பதை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.இதுவரை திருட்டு சம்பவம் தொடர்பாக எவரும் இனம்கானப்படவில்லை என்பதுடன், இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலும் ஆலய நிர்வாகத்தினரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement