• Nov 28 2024

ஈழத்தமிழரின் சமுதாயத்தை வளப்படுத்தும் மாதமாகவும் இம்மாதம் அமைய வேண்டும் - நாடுகடந்த தமிழீழ உறுப்பினர் வாழ்த்து...!samugammedia

Anaath / Jan 4th 2024, 1:40 pm
image

ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக பிரகடனப்படுத்தியதற்கு கனடாவிற்கு பாராட்டுதலையும், நன்றியையும் பராட்டுதலையும் தெரிவித்துக்கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கதின் பிரதம உறுப்பினர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில், தமிழ் மரபுத் திங்கள் 2024 ஆரம்பவிழாவிற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் நான் மட்டற்ற மகிழ்வும், பெருமிதமும்அடைகின்றேன். ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக பிரகடனப்படுத்தியதற்கு கனடாவிற்கு நான் எனது பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். 

தை மாதத்தை தமிழ் மரபு மாதமாக தெதிவு செய்தமை மிகவும் பொருத்தமானதாகும்.தமிழ்த் திருநாளான பொங்கல் திருநாள் தை மாதத்தில் நடைபெறுவது தை மாதத்திற்குதனிச்சிறப்பை சேர்க்கின்றது. சோழ பேரரசு காலத்திலிருந்தே பொங்கல்கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற ஆய்வும், “ஞாயிறு போற்றுதும், ஞாயிறுபோற்றுதும்” என்ற சிலப்பதிகார வரிகளும், பொங்கலின் தொன்மையை எடுத்துக்காட்டுகின்றது.

எம் இனம் தொன்மை வாய்ந்த ஓர் இனம். உலகின் செம்மொழிகளில் ஒன்று தமிழ் மொழி.“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பூங்குன்றனாரின் வரிகள் உலகளாவிய எமதுசகோதரத்துவத்தை, எமது தோழமையை எடுத்துக் காட்டுகின்றது. இவ் தமிழ் மரபுமாதத்தில், எமது கலை, கலாச்சாரத்தை மற்றைய இனத்தவர்களுடன் பகிரும்அதேவேளை உலகில் எங்கு, எச்சமூகத்திற்கு அநீதி நடக்கிறதோ, அதற்காக நாம் குரல்கொடுக்க தயங்க முடியாது. இவ் அடிப்படையில் வருகின்ற சனிக்கிழமை நடைபெற இருக்கின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் காசாவில் போர்நிறுத்தம்கோரும் தீர்மானம் விவாதிக்கப்பட இருக்கின்றது. இம் மாதத்தில் நாம் எமது கலை, கலாச்சாரத்தை மட்டும் மற்றைய சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளாமல், வாழ்வுரிமைக்கான எமது போராட்டத்திற்கும், சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்டத்திற்கும், ஈடுசெய் நீதிக்கான எமது போராட்டத்திற்கும் அவர்களது

ஆதரவை கட்டி எழுப்பும் மாதமாகவும் நாம் பயன்படுத்த வேண்டும். இன்று புலத்தில் தமிழ் சமுதாயம் ஓர் பலமிக்க சமுதாயமாக பரிணமித்து வருகின்றது. இப்பலத்தினை ஈழத்தமிழருக்கென நாடு அமைப்பதிலும், சமத்துவமான, வளமிக்க உலக சமுதாயத்தை கட்டி எழுப்புவதிலும் நாம் பயன்படுத்துவோம். இச் சந்தர்ப்பத்தில், மற்றைய நாடுகளில் வாழும் தமிழ் சகோதரர்கள் அந் நாட்டு அரசாங்கத்தை ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக பிரகடனப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடும்படி கோருகின்றேன்.

கனடாவில் ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக, பிரகடனப்படுத்தி, அயராது உழைத்து வெற்றி கண்ட தமிழ் மரபுத் திங்கள் செயலவை மேலாளர் திரு. நீதன் சண் அவர்களிற்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழர் தலைவிதி தமிழர் கையில்.  என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


ஈழத்தமிழரின் சமுதாயத்தை வளப்படுத்தும் மாதமாகவும் இம்மாதம் அமைய வேண்டும் - நாடுகடந்த தமிழீழ உறுப்பினர் வாழ்த்து.samugammedia ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக பிரகடனப்படுத்தியதற்கு கனடாவிற்கு பாராட்டுதலையும், நன்றியையும் பராட்டுதலையும் தெரிவித்துக்கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கதின் பிரதம உறுப்பினர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில், தமிழ் மரபுத் திங்கள் 2024 ஆரம்பவிழாவிற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் நான் மட்டற்ற மகிழ்வும், பெருமிதமும்அடைகின்றேன். ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக பிரகடனப்படுத்தியதற்கு கனடாவிற்கு நான் எனது பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். தை மாதத்தை தமிழ் மரபு மாதமாக தெதிவு செய்தமை மிகவும் பொருத்தமானதாகும்.தமிழ்த் திருநாளான பொங்கல் திருநாள் தை மாதத்தில் நடைபெறுவது தை மாதத்திற்குதனிச்சிறப்பை சேர்க்கின்றது. சோழ பேரரசு காலத்திலிருந்தே பொங்கல்கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற ஆய்வும், “ஞாயிறு போற்றுதும், ஞாயிறுபோற்றுதும்” என்ற சிலப்பதிகார வரிகளும், பொங்கலின் தொன்மையை எடுத்துக்காட்டுகின்றது.எம் இனம் தொன்மை வாய்ந்த ஓர் இனம். உலகின் செம்மொழிகளில் ஒன்று தமிழ் மொழி.“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பூங்குன்றனாரின் வரிகள் உலகளாவிய எமதுசகோதரத்துவத்தை, எமது தோழமையை எடுத்துக் காட்டுகின்றது. இவ் தமிழ் மரபுமாதத்தில், எமது கலை, கலாச்சாரத்தை மற்றைய இனத்தவர்களுடன் பகிரும்அதேவேளை உலகில் எங்கு, எச்சமூகத்திற்கு அநீதி நடக்கிறதோ, அதற்காக நாம் குரல்கொடுக்க தயங்க முடியாது. இவ் அடிப்படையில் வருகின்ற சனிக்கிழமை நடைபெற இருக்கின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் காசாவில் போர்நிறுத்தம்கோரும் தீர்மானம் விவாதிக்கப்பட இருக்கின்றது. இம் மாதத்தில் நாம் எமது கலை, கலாச்சாரத்தை மட்டும் மற்றைய சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளாமல், வாழ்வுரிமைக்கான எமது போராட்டத்திற்கும், சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்டத்திற்கும், ஈடுசெய் நீதிக்கான எமது போராட்டத்திற்கும் அவர்களதுஆதரவை கட்டி எழுப்பும் மாதமாகவும் நாம் பயன்படுத்த வேண்டும். இன்று புலத்தில் தமிழ் சமுதாயம் ஓர் பலமிக்க சமுதாயமாக பரிணமித்து வருகின்றது. இப்பலத்தினை ஈழத்தமிழருக்கென நாடு அமைப்பதிலும், சமத்துவமான, வளமிக்க உலக சமுதாயத்தை கட்டி எழுப்புவதிலும் நாம் பயன்படுத்துவோம். இச் சந்தர்ப்பத்தில், மற்றைய நாடுகளில் வாழும் தமிழ் சகோதரர்கள் அந் நாட்டு அரசாங்கத்தை ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக பிரகடனப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடும்படி கோருகின்றேன்.கனடாவில் ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக, பிரகடனப்படுத்தி, அயராது உழைத்து வெற்றி கண்ட தமிழ் மரபுத் திங்கள் செயலவை மேலாளர் திரு. நீதன் சண் அவர்களிற்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழர் தலைவிதி தமிழர் கையில்.  என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement