• Dec 25 2024

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் முதலைகளுக்கு இரையானார்கள் - உண்மையை அம்பலப்படுத்திய ராஜித

Chithra / Dec 20th 2024, 9:48 am
image

 

வெள்ளை வானில் கடத்தியவர்களை கொலை செய்து அந்த சடலங்களை முதலைகளுக்கு இரையாக்கியமை உண்மை என்பது நிரூபனமாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்ட நபர்கள் கொலை செய்யப்பட்டு, 

சில உடல் பாகங்களை அகற்றி சடலங்களை முதலைகளுக்கு உணவாக வழங்கியமை விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை குற்ற விசாரணைப் பிரிவினர் தமக்கு அறியத் தந்ததாக முன்னாள் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி, பின்னர் குற்ற புலனாய்வு பிரிவில் இணைந்து கொண்ட நபர் இந்த உண்மைகளை மூடி மறைக்க உதவியுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி காலத்தில் இந்த விசாரணைகள் ஸ்தம்பிதம் அடைந்தமைக்கு ஒரு சிலரின் தேவையற்ற பதற்றமே காரணமாகும்.

அப்போதைய பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவின் பிரதான அதிகாரியொருவரின் செயற்பாடுகளும் இந்த விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு இடையூறாக அமைந்தது.

எவ்வாறெனினும், இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை விதிப்பதற்கு அரசாங்கமொன்றுக்கு ஐந்து ஆண்டு கால அவகாசம் போதுமானதல்ல என ராஜித கூறியுள்ளார். 

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் முதலைகளுக்கு இரையானார்கள் - உண்மையை அம்பலப்படுத்திய ராஜித  வெள்ளை வானில் கடத்தியவர்களை கொலை செய்து அந்த சடலங்களை முதலைகளுக்கு இரையாக்கியமை உண்மை என்பது நிரூபனமாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்ட நபர்கள் கொலை செய்யப்பட்டு, சில உடல் பாகங்களை அகற்றி சடலங்களை முதலைகளுக்கு உணவாக வழங்கியமை விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயத்தை குற்ற விசாரணைப் பிரிவினர் தமக்கு அறியத் தந்ததாக முன்னாள் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி, பின்னர் குற்ற புலனாய்வு பிரிவில் இணைந்து கொண்ட நபர் இந்த உண்மைகளை மூடி மறைக்க உதவியுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.நல்லாட்சி காலத்தில் இந்த விசாரணைகள் ஸ்தம்பிதம் அடைந்தமைக்கு ஒரு சிலரின் தேவையற்ற பதற்றமே காரணமாகும்.அப்போதைய பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவின் பிரதான அதிகாரியொருவரின் செயற்பாடுகளும் இந்த விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு இடையூறாக அமைந்தது.எவ்வாறெனினும், இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை விதிப்பதற்கு அரசாங்கமொன்றுக்கு ஐந்து ஆண்டு கால அவகாசம் போதுமானதல்ல என ராஜித கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement