• Apr 03 2025

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்குள் நுழை முற்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!

Chithra / Jan 5th 2024, 8:53 am
image

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றிரவு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பிலேயே  குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸார் அவர்களிடம் வாக்குமூலத்தைப் பெற்றுவிட்டு பிணையில் விடுவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று (04) போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்குள் நுழை முற்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றிரவு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பிலேயே  குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.பொலிஸார் அவர்களிடம் வாக்குமூலத்தைப் பெற்றுவிட்டு பிணையில் விடுவித்தனர்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று (04) போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement