• May 20 2024

ஜனாதிபதிக்கு முன் புகைத்துக் கொண்டு சென்ற பாதுகாப்பு பிரிவின் வாகனம்...!samugammedia

Anaath / Jan 5th 2024, 9:26 am
image

Advertisement

நேற்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவரது வாகனத்துக்கு முன்னால் சென்ற பாதுகாப்பு பிரிவினரின் வாகனமானது மிகுந்த புகையினை வெளியேற்றியவாறு சென்றது.

பொதுமக்களின் வாகனங்கள் புகையினை வெளியேற்றும் போது தண்டங்களை விதிக்கும் பொலிஸார் ஏன் அரச வாகனங்களுக்கு அந்த நடைமுறைகளை பேணுவதில்லை. அத்துடன் இவ்வாறு புகையை வெளிவிடும் வாகனங்களுக்கு எவ்வாறு புகை சான்றிதழ் வழங்க முடியும்? புகை சான்றிதழ் வழங்கா விட்டால் வாகன வரியினை செலுத்த முடியாது. வாகன வரியை செலுத்தாமல் வாகனத்தை பாவனை செய்தால் அது இலங்கையின் சட்டப்படி குற்றமாகும்.

எனவே அரசாங்க வாகனங்களுக்கு ஒரு சட்டமும் பொதுமக்களது வாகனங்களுக்கு ஒரு சட்டமும் இலங்கையில் காணப்படுகின்றதா என அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

ஜனாதிபதிக்கு முன் புகைத்துக் கொண்டு சென்ற பாதுகாப்பு பிரிவின் வாகனம்.samugammedia நேற்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.இதன்போது அவரது வாகனத்துக்கு முன்னால் சென்ற பாதுகாப்பு பிரிவினரின் வாகனமானது மிகுந்த புகையினை வெளியேற்றியவாறு சென்றது.பொதுமக்களின் வாகனங்கள் புகையினை வெளியேற்றும் போது தண்டங்களை விதிக்கும் பொலிஸார் ஏன் அரச வாகனங்களுக்கு அந்த நடைமுறைகளை பேணுவதில்லை. அத்துடன் இவ்வாறு புகையை வெளிவிடும் வாகனங்களுக்கு எவ்வாறு புகை சான்றிதழ் வழங்க முடியும் புகை சான்றிதழ் வழங்கா விட்டால் வாகன வரியினை செலுத்த முடியாது. வாகன வரியை செலுத்தாமல் வாகனத்தை பாவனை செய்தால் அது இலங்கையின் சட்டப்படி குற்றமாகும்.எனவே அரசாங்க வாகனங்களுக்கு ஒரு சட்டமும் பொதுமக்களது வாகனங்களுக்கு ஒரு சட்டமும் இலங்கையில் காணப்படுகின்றதா என அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisement

Advertisement

Advertisement