• Sep 21 2024

பதவிகளுக்கு சண்டை இடுபவர்களே புதிய கூட்டணியில் - சாகர விமர்சனம்.!

Sharmi / Jan 13th 2023, 1:17 pm
image

Advertisement

பதவிகளுக்காகவும், தலைமைத்துவத்துக்காகவும் சண்டையிடுபவர்களே புதிய கூட்டணியில் இணைந்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் விமர்சித்துள்ளார்.

'ஹொலிகொப்டர்' கூட்டணியால் எங்களுக்கு எவ்வித சவாலும் கிடையாது. உள்ளாட்சிமன்ற தேர்தலில் நாம் வெற்றி நடை போடுவோம்.

உள்ளாட்சிமன்ற தேர்தலை இலக்கு வைத்து 12 அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் 'சுதந்திர மக்கள் கூட்டணி' எனும் பெயரில் புதியதொரு அரசியல் கூட்டணி உதயமாகியுள்ளது.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி,  

பிவிதுரு ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி உட்பட 13 கட்சிகள் இதில் அங்கம் வகிக்கின்றன இந்நிலையிலேயே இந்தக் கூட்டணியை அவர் விமர்சித்துள்ளார்.

பதவிகளுக்காகவும், தலைமைத்துவத்துக்காகவும் சண்டையிடுபவர்களே புதிய கூட்டணியில் உள்ளனர்.

அதனால்தான் தலைவர் ஒருவரை தெரிவுசெய்யாமல், தலைமைத்துவ சபையை நியமித்துள்ளதாக சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதவிகளுக்கு சண்டை இடுபவர்களே புதிய கூட்டணியில் - சாகர விமர்சனம். பதவிகளுக்காகவும், தலைமைத்துவத்துக்காகவும் சண்டையிடுபவர்களே புதிய கூட்டணியில் இணைந்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் விமர்சித்துள்ளார்.'ஹொலிகொப்டர்' கூட்டணியால் எங்களுக்கு எவ்வித சவாலும் கிடையாது. உள்ளாட்சிமன்ற தேர்தலில் நாம் வெற்றி நடை போடுவோம்.உள்ளாட்சிமன்ற தேர்தலை இலக்கு வைத்து 12 அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் 'சுதந்திர மக்கள் கூட்டணி' எனும் பெயரில் புதியதொரு அரசியல் கூட்டணி உதயமாகியுள்ளது.மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி,  பிவிதுரு ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி உட்பட 13 கட்சிகள் இதில் அங்கம் வகிக்கின்றன இந்நிலையிலேயே இந்தக் கூட்டணியை அவர் விமர்சித்துள்ளார்.பதவிகளுக்காகவும், தலைமைத்துவத்துக்காகவும் சண்டையிடுபவர்களே புதிய கூட்டணியில் உள்ளனர்.அதனால்தான் தலைவர் ஒருவரை தெரிவுசெய்யாமல், தலைமைத்துவ சபையை நியமித்துள்ளதாக சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement