• May 03 2024

ஹனிமூனிலேயே உலகம் முழுக்க சுத்தி வந்துடுவீங்க போல- திருமணத்திற்கு பிறகு கணவருடன் ஜாலியாக ஊர் சுற்றும் ஹன்சிகா!

keerthana / Jan 13th 2023, 1:17 pm
image

Advertisement

பாலிவூட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிய இவர் தமிழ், கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார். 


இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகா மோத்வானி, தற்போது தமிழில் ரவுடிபேபி, கார்டியன், பார்ட்னர் உள்ளிட்ட 5 படங்களிலும் தெலுங்கில் 105 மினிட்ஸ், மை நேம் இஸ் ஷ்ருதி ஆகிய படங்களிம் நடித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தன்னுடைய தொழில் பார்ட்னரும் நீண்ட நாள் நண்பருமான சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்தார் 


இவர்களுடைய திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான முண்டோடா அரண்மனையில் நடைபெற்றது. இவர்களின் திருமண போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வந்தது. இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தனது காதல் கணவருடன் ஹனிமூன் கொண்டாடி வருகிறார். 


இதற்காக வெளிநாடுகளில் பறந்து கொண்டிருக்கிறார் ஹன்சிகா .கடந்த வாரம் முழுக்க பாரிஸ், செக் குடியரசின் பிராக், ஜெர்மனி, ஆஸ்திரியா என ஹனிமூனை கொண்டாடிய இவர் இந்த வாரம் எகிப்தில் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளார். தான் எகிப்தில் ஹனிமூன் கொண்டாடிய போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

பிரமிட்டுகளுடன் ஜாலி போஸ் கொடுத்துள்ள ஹன்சிகா, ஒட்டகத்திலும் சவாரி செய்துள்ளார்.ஹன்சிகா மோத்வானியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், ஹனிமூனிலேயே உலகம் முழுக்க சுத்தி வந்துடுவீங்க போல என கூறி வருகின்றனர். மேலும் தனது ஹனிமூன் போட்டோக்களுக்கு பிரமிட்டு போல் உயர்ந்து நில்லுங்கள் என கேப்ஷன் கொடுத்துள்ளார் . அதனை பார்த்த அவரது கணவர், நீதான் என் வாழ்க்கையின் தூண் என உருகியுள்ளார்.


























ஹனிமூனிலேயே உலகம் முழுக்க சுத்தி வந்துடுவீங்க போல- திருமணத்திற்கு பிறகு கணவருடன் ஜாலியாக ஊர் சுற்றும் ஹன்சிகா பாலிவூட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிய இவர் தமிழ், கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகா மோத்வானி, தற்போது தமிழில் ரவுடிபேபி, கார்டியன், பார்ட்னர் உள்ளிட்ட 5 படங்களிலும் தெலுங்கில் 105 மினிட்ஸ், மை நேம் இஸ் ஷ்ருதி ஆகிய படங்களிம் நடித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தன்னுடைய தொழில் பார்ட்னரும் நீண்ட நாள் நண்பருமான சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்தார் இவர்களுடைய திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான முண்டோடா அரண்மனையில் நடைபெற்றது. இவர்களின் திருமண போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வந்தது. இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தனது காதல் கணவருடன் ஹனிமூன் கொண்டாடி வருகிறார். இதற்காக வெளிநாடுகளில் பறந்து கொண்டிருக்கிறார் ஹன்சிகா .கடந்த வாரம் முழுக்க பாரிஸ், செக் குடியரசின் பிராக், ஜெர்மனி, ஆஸ்திரியா என ஹனிமூனை கொண்டாடிய இவர் இந்த வாரம் எகிப்தில் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளார். தான் எகிப்தில் ஹனிமூன் கொண்டாடிய போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.பிரமிட்டுகளுடன் ஜாலி போஸ் கொடுத்துள்ள ஹன்சிகா, ஒட்டகத்திலும் சவாரி செய்துள்ளார்.ஹன்சிகா மோத்வானியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், ஹனிமூனிலேயே உலகம் முழுக்க சுத்தி வந்துடுவீங்க போல என கூறி வருகின்றனர். மேலும் தனது ஹனிமூன் போட்டோக்களுக்கு பிரமிட்டு போல் உயர்ந்து நில்லுங்கள் என கேப்ஷன் கொடுத்துள்ளார் . அதனை பார்த்த அவரது கணவர், நீதான் என் வாழ்க்கையின் தூண் என உருகியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement