கடந்த காலத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது ராஜபக்ஸ குடும்பத்துடன் இணைந்து கிரிபத்து உண்டு வெடி கொழுத்தி மகிழ்ந்ததுடன் பிள்ளையான், கருணா குழுவுடன் இணைந்து மேடைகளில் ஏறி வாக்குகேட்டு பிரச்சாரம் செய்ததுடன் சின்னவத்தை விகாரையை கட்டுவதற்கு அழைப்பு விடுத்தவர்கள், தமிழ் தேசிய உடையை போட்டுக் கொண்டு இன்று வெள்ளைவேட்டி சேட்டுன் மாலை போட்டு நாடகமாடி வருகின்றனர் என தமிழ் தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி வவுணதீவு பிரதேச சபை வேட்பாளர் செல்வகுமார் தலைமையில் ஆயித்தியமலை நேற்று சனிக்கிழமை (19) இடம்பெற்ற தியாக தீபம் அன்னை பூபதியின் 37 வது நினைவேந்தலில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் பலத்தின் ஒரு சம பலத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர். அதனடிப்படையில் அரசாங்கம் பேச்சுவார்தைக்கு அழைத்து நோர்வே போன்ற நாடுகள் எங்களை மழுங்கடிக்க செய்து பெரிய இனழிப்புக்கு உட்படுத்தியுள்ளது.
ஆகவே இதற்கான பரிகாரங்களை சர்வதேசத்தில் இருக்கின்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டும்.
அதற்கான நகரதல்களை செய்ய வேண்டுமாக இருந்தால் ஒரு சரியான தலைமைத்துவம் வேண்டும். அந்த கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னம். இதனை மக்கள் அனைவரும் பலப்படுத்த வேண்டும்.
இன்று ஆட்சியல் இருக்கின்ற அனுர அரசு நாட்டின் பொருளாதாரங்களை மோசடியாக சுரண்டி இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களை கைது செய்கின்றனர்.
இது அவர்களுடைய அரசியல் இலாபகமாக இருக்கலாம் அல்லது உண்மையில் இந்த ஊழல் மோசடி செய்தவர்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லுகின்ற நல்ல விடையமாக இருக்கலாம். எனவே ஊழல் மோசடி செய்தவர்களை கைது செய்வதை நாங்கள் வரவேற்கின்றோம்.
அதேவேளை நிறைவேற்றப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் சட்டம் ஊடாக இந்த நாட்டில் கொள்ளையடித்த சொத்துக்கள் பறிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
எனவே எங்கள் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமாக இருந்தால் இலஞ்சம் ஊழல் இல்லாது மிக நேர்மையாக நேர்த்தியாக வரழக்கூடிய நிலைக்கு கொண்டு போக கூடிய சமூகத்தை கட்டியொழுப்பு உறுதுணையாக இருப்போம்.
ஆனால் எங்கள் மக்களை மீண்டும் ஏனைய அரசுகள் போன்று நீங்களும் இனழிப்பு செய்தற்கான செயற்பட்டால் நாங்கள் அதை எதிர்கின்ற விதமாக செயற்படுவோம்.
அதேவேளை தமிழ் மக்கள் சம உரிமையோடு வாழ்வதற்கு அரசியல் தீர்வு திட்டத்துக்கு அரசாங்கம் செல்ல வேண்டும்.
மாறாக தமிழர்கள் 76 வருடங்களாக எதிர்த்து வருகின்ற ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்காக இந்த அரசு தொடர்ந்து செயற்படுமாக இருந்தால் நாங்கள் நாங்களாக முடிவெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். என்றார்.
சின்னவத்தை விகாரையை கட்டுவதற்கு அழைப்பு விடுத்தவர்கள் தமிழ் தேசிய உடையை போட்டுக் கொண்டு நாடகம் த.சுரேஸ் குற்றச்சாட்டு கடந்த காலத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது ராஜபக்ஸ குடும்பத்துடன் இணைந்து கிரிபத்து உண்டு வெடி கொழுத்தி மகிழ்ந்ததுடன் பிள்ளையான், கருணா குழுவுடன் இணைந்து மேடைகளில் ஏறி வாக்குகேட்டு பிரச்சாரம் செய்ததுடன் சின்னவத்தை விகாரையை கட்டுவதற்கு அழைப்பு விடுத்தவர்கள், தமிழ் தேசிய உடையை போட்டுக் கொண்டு இன்று வெள்ளைவேட்டி சேட்டுன் மாலை போட்டு நாடகமாடி வருகின்றனர் என தமிழ் தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணி வவுணதீவு பிரதேச சபை வேட்பாளர் செல்வகுமார் தலைமையில் ஆயித்தியமலை நேற்று சனிக்கிழமை (19) இடம்பெற்ற தியாக தீபம் அன்னை பூபதியின் 37 வது நினைவேந்தலில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கை இராணுவத்தின் பலத்தின் ஒரு சம பலத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர். அதனடிப்படையில் அரசாங்கம் பேச்சுவார்தைக்கு அழைத்து நோர்வே போன்ற நாடுகள் எங்களை மழுங்கடிக்க செய்து பெரிய இனழிப்புக்கு உட்படுத்தியுள்ளது.ஆகவே இதற்கான பரிகாரங்களை சர்வதேசத்தில் இருக்கின்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டும்.அதற்கான நகரதல்களை செய்ய வேண்டுமாக இருந்தால் ஒரு சரியான தலைமைத்துவம் வேண்டும். அந்த கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னம். இதனை மக்கள் அனைவரும் பலப்படுத்த வேண்டும்.இன்று ஆட்சியல் இருக்கின்ற அனுர அரசு நாட்டின் பொருளாதாரங்களை மோசடியாக சுரண்டி இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களை கைது செய்கின்றனர். இது அவர்களுடைய அரசியல் இலாபகமாக இருக்கலாம் அல்லது உண்மையில் இந்த ஊழல் மோசடி செய்தவர்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லுகின்ற நல்ல விடையமாக இருக்கலாம். எனவே ஊழல் மோசடி செய்தவர்களை கைது செய்வதை நாங்கள் வரவேற்கின்றோம்.அதேவேளை நிறைவேற்றப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் சட்டம் ஊடாக இந்த நாட்டில் கொள்ளையடித்த சொத்துக்கள் பறிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.எனவே எங்கள் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமாக இருந்தால் இலஞ்சம் ஊழல் இல்லாது மிக நேர்மையாக நேர்த்தியாக வரழக்கூடிய நிலைக்கு கொண்டு போக கூடிய சமூகத்தை கட்டியொழுப்பு உறுதுணையாக இருப்போம்.ஆனால் எங்கள் மக்களை மீண்டும் ஏனைய அரசுகள் போன்று நீங்களும் இனழிப்பு செய்தற்கான செயற்பட்டால் நாங்கள் அதை எதிர்கின்ற விதமாக செயற்படுவோம்.அதேவேளை தமிழ் மக்கள் சம உரிமையோடு வாழ்வதற்கு அரசியல் தீர்வு திட்டத்துக்கு அரசாங்கம் செல்ல வேண்டும்.மாறாக தமிழர்கள் 76 வருடங்களாக எதிர்த்து வருகின்ற ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்காக இந்த அரசு தொடர்ந்து செயற்படுமாக இருந்தால் நாங்கள் நாங்களாக முடிவெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். என்றார்.