• Oct 07 2024

சமஸ்டியை ஏற்காத - சமாதான முயற்சிகளை எதிர்த்த ஜேவிபி - பிரித்தானிய தமிழர் பேரவை அறிக்கை!

Tamil nila / Oct 6th 2024, 10:33 pm
image

Advertisement

ஜேவிபியின் தமிழர் விரோத கடந்த காலங்கள் சமாதான முயற்சிகளை குழப்புவதற்கு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவைஇலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி எதிர்கால ஜனநாய செயல்முறையை ஒற்றுமையாக எதிர்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது

பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது

சிறிலங்காவில் அடுத்தடுத்து வரும் நெறிமுறை அற்ற அரசாங்கங்களின் ஆட்சியின் கீழ் போராடும் போது,  கட்டமைப்பு ரீதியான தீவிரமான மாற்றங்களை கொண்டு வரும் வாக்குறுதியுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் (AKD) வருகை, சிறிலங்காவில் உள்ள மக்களுக்கு பெரும் நிம்மதியாகத் தெரிகிறது. தமிழ் மக்களுக்கு எதிரான 75 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறை சுழற்சி மற்றும் இனவழிப்புக்கு இந்த உற்சாகம்  முடிவு கட்டுமா?

இந்த அறிக்கை AKD இன் அடித் தளமான ஜனதா விமுக்தி பெரமுனாவின் (ஜேவிபி) மோசமான கடந்த காலத்தை வெளி கொண்டு வருகிறது.

இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க (AKD) யார்,  அவருடைய பின்னணி என்ன? 

அவர் கூறுவது போல் அவர் ஒரு மார்க்சிஸ்ட் அல்ல; இலங்கை அரசியலில் மையக் கோட்டிற்கு  இடது புறம் சாய்ந்த  ஒரு சிங்கள தேசியவாதி. அவரது அரசியல் வாழ்க்கை ஜனாதிபதியாக  அவரின்  கீழ் இன்னும் வரவிருக்கின்ற  விஷயங்களுக்கு சிறந்த சான்றாக உள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) இந்த அறிக்கையில் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) மற்றும் AKD-யின்  உண்மையான முகத்தை ஆராய்ந்து  தமிழ் மக்களின் முன் வைக்க விரும்புகிறது.

AKD தனது மாணவ பராயத்தில் JVPயில் சேர்ந்தார். அது தன்னை ஒரு தமிழ்-எதிர்ப்பு, மேற்கு-எதிர்ப்பு சித்தாந்தம் கொண்ட,  இந்திய-எதிர்ப்பு, சிங்கள பௌத்த அடிப்படைவாத குழுவாக கட்டமைத்து உள்ளது.

1987இல் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வன்முறை பிரச்சாரம் செய்தது.

ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி (UNF) அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையிலான நோர்வே சமாதான முன்னெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தான் 2001-2004 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரதான அரசியல் சக்தியாக ஜே.வி.பி மகத்தான முக்கியத்துவத்தைப் பெற்றது.

பெப்ரவரி 2002 போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜே.வி.பி., சர்வதேச ரீதியில் அனுசரணையளிக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிரான சக்தி வாய்ந்த மற்றும் ஒத்திசைவான கருத்தியல்-அரசியல் வேலைத் திட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. 

அது 2003இல் கொழும்பில் மாதத்திற்கு ஒரு முறை என்ற அளவில் பாரிய வீதி ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தது. இது கொழும்பு தலைநகரை பல சந்தர்ப்பங்களில் முற்றிலுமாக ஸ்தம்பிக்க வைத்தது. UNF இன் சந்தை சீர்திருத்தக் கொள்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் பொருளாதார அதிருப்தியின் வேகத்தை வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டது. 

2003இன் பிற்பகுதியிலும் 2004இன் தொடக்கத்திலும் சுகாதாரத் துறை மற்றும் ரயில்வேயில் தொடர்ச்சியான பொதுத் துறை வேலை நிறுத்தங்களைத் தூண்டுவதற்கு தொழிற்சங்க இயக்கத்தில் அதன் செல்வாக்கைப் பயன்படுத்தியது. 

எனவே, ஜே.வி.பி., சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிராக பொதுக் கருத்தைத் திரட்டி ஒன்றிணைப்பதில் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்ததுடன், ஜனாதிபதி குமாரதுங்கவின் மீதான வளர்ந்து வரும் அழுத்தத்திற்கு பெரும் ஆதரவினை வழங்கியது. இது ஐ.தே.மு அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வதில் சனாதிபதி சந்ந்திரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக ஆற்றல் மிக்க ஏப்ரல் 2004 தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், UNF அரசாங்கத்தின் தோல்வியையும், சமாதான முன்னெடுப்புகளின்  சீர்குலைவையும் உறுதி செய்தது. 2004 ஏப்ரலுக்குப் பின்னரும், புதிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) அரசாங்கத்திற்குள் சமரசமற்ற பிடிவாதமான கூட்டணிப் பங்காளியாக ஜே.வி.பி.யின் செல்வாக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் அமைதிக்கான  அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததில் குறிப்பிடத் தக்க பங்கைக் கொண்டிருந்தது.

சமாதானப் பேச்சுக்களை ஆதரிக்க உடன்படுவதற்கு அவர்கள் (ஜேவிபி) நிறைவேற்ற முடியாத முன் நிபந்தனைகளை முன் வைத்தனர்.  கூட்டு சுனாமி உதவி விநியோகம் (PTOMS – Post Tsunami Operational Management Structure) தொடர்பாக விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு உடன்பாட்டையும் சகித்துக் கொள்ள மறுத்து,  நவம்பர் 2005 இல் மகிந்த இராஜபக்ஷவின் வெற்றிகரமான ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை சமாதானத்திற்கு எதிரானதாக மேடையாக மாற்றினார்கள்.

2006ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஜே.வி.பி.,   இராணுவத் தீர்வை வெளிப்படையாக முன் வைத்து, இறுதியாக ஆகஸ்ட் 2006இல் போரை மீண்டும் தொடங்க அரசாங்கத்தை வலியுறுத்தியது.  மார்க்சியம் மற்றும் சிங்கள தேசியவாதத்தின் கலவையானது ஜே.வி.பி.க்கு ஒரு பலமாக மாறி, சிங்கள தேசிய சக்தியாக உருவெடுக்க உதவியது.

ஜூன் 1998 முதல் டிசம்பர் 1999 வரை, ஜே.வி.பி., அவர்களின் நிகழ்ச்சி நிரலின் சிங்கள தேசியவாத கூறுகளை தற்காலிகமாக தவிர்த்ததுடன், ஆளும் மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் தீவிர இடது பக்கம் தங்களை நிலைநிறுத்திய மூன்று சிறிய கட்சிகளுடன் ஒரு பரந்த கூட்டணி அமைத்தது. 

ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய மாதங்களில், ஜே.வி.பி. இந்த இடதுசாரிக் கூட்டாளிகளுடன் இருந்து முற்றாகப் பிரிந்து, மார்க்சியத்திலிருந்து சிங்கள தேசியவாதத்தை நோக்கி கருத்தியல் வலியுறுத்தலை மாற்றியது.

1999ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, குறிப்பாக 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆனையிறவில் விடுதலைப் புலிகளின் அற்புதமான இராணுவ வெற்றிகள் அரசாங்கத்தின் இராணுவ நிகழ்ச்சி நிரலின் நம்பகத் தன்மையை முற்றிலுமாக சீர்குலைத்திருந்தன. 

இது நோர்வேயின் நுழைவுக்கும், மோதலில் மத்தியஸ்தராக ஏற்றுக் கொள்ளும் அங்கீகாரத்துக்கும்  மற்றும் விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியத்திற்கும் ஒரு சந்தர்ப்பமளித்தது. இது 1995ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வந்த அரசாங்கத்தின் முக்கிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் அதிகாரப் பகிர்வுப் பொதி  இறுதியாக ஆகஸ்ட் 2000இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட ஏதுவானது. 

அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வு மற்றும் வெளிநாட்டு மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் ஆகிய இரண்டு யோசனைகளும் நீண்ட காலமாக சிங்கள தேசியவாதிகளுக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது. இராணுவ வெற்றி தவிர்த்த எந்த தீர்வும், சிங்கள தேசியவாதிகளுக்கு  முற்றிலும் எதிரானதாக இருந்தது.

பிரதான எதிர்க் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியானது, அதிகாரப் பகிர்வு, வெளிநாட்டு மத்தியஸ்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளின் அவசியம் குறித்து அரசாங்கத்துடன் பரந்த உடன்பாட்டில் இருந்ததால்,   சமாதான நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான  சிங்கள தேசியவாத  வகிபாகத்தினை ஜே.வி.பி. பிடிப்பதற்கு பரந்த அளவில் ஒரு வெளி திறந்து விடப்பட்டது.   

அக்டோபர் 2000இல் வரவிருந்த பாராளுமன்றத் தேர்தல்களின் பின்னணியில், வளர்ந்து வரும் சிங்கள தேசியவாத வெளியின் சுவீகரிப்பு, 1994க்குப் பிந்தைய புத்துயிர் பெற்ற ஜே.வி.பி.க்கு அதன் கவனமாக வளர்த்தெடுக்கப்பட்ட அடித்தள பலத்தை தேசிய அரங்கிற்கு மாற்றுவதற்கான முதல் வாய்ப்பை வழங்கியது. உண்மையில் ஜே.வி.பி.க்கு அதன் 35 ஆண்டு கால வரலாற்றில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முதல் அர்த்தமுள்ள வாய்ப்பாக அது அமைந்தது. மேலும் ஆளும் கூட்டணியின் இடதுசாரிகளில் இருந்து அதிருப்தியடைந்த வாக்காளர்களை வெளியேற்றி பெரும் வெற்றியை ஜே.வி.பி. பெற்றது.

2000 ஆம் ஆண்டின் முற் பகுதிக்கும் 2005ஆம் ஆண்டின் பிற் பகுதிக்கும் இடையில், சமாதான முன்னெடுப்புகளை மையமாகக் கொண்ட தொடர்ச்சியான பிரச்சாரங்களில், சிங்கள தேசியவாத நிலப் பரப்பில் மார்ச் 2000 முதல், நோர்வே மத்தியஸ்தர்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிராக ஜே.வி.பி நீண்ட பிரச்சாரத்தை ஆரம்பித்தது. சில மாதங்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 2000இல், ஜனாதிபதி குமாரதுங்கவின் புதிய அரசியலமைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு முன்மொழிவுகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களில் ஜே.வி.பி மீண்டும் முன்னணியில் இருந்தது.

டிசம்பர் 2001 தேர்தலுக்குப் பின்னர், விரக்தியடைந்த மற்றும் மனச் சோர்வடைந்த SLFPக்கு எதிராக ஜே.வி.பி.,   உற்சாகமாக இருந்ததுடன், ஒன்றிணைவதிலும் கவனம் செலுத்துவதிலும், வளர்ச்சியடைந்து வரும் போர்நிறுத்தம் மற்றும் சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிர்ப்பை வழிநடத்துவதிலும் முன்னின்றது.

அடுத்த மாதங்களில், 2002 பெப்ரவரியில் முறையான போர் நிறுத்த உடன்படிக்கையை (CFA), செப்டம்பர் 2002 மற்றும் மார்ச் 2003 க்கு இடையில் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை திட்டவட்டமாக எதிர்ப்பதற்கு முன்முயற்சியை எடுத்துக்கொண்டு, ஜே.வி.பி மற்ற எதிர்க் கட்சிகளை பின் தள்ளி திறம்பட முன்னேறியது.  

ஏப்ரல் 2004 தேர்தலுக்குப் பின்னரும் கூட, 2004 மே மற்றும் டிசம்பர் மாதங்களில் LTTE உடனான எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் மீண்டும் தொடங்குவதற்கு ஜே.வி.பி கடும் விரோதமாக இருந்தது.

சுனாமிக்குப் பிந்தைய உதவிப் பகிர்வு பொறிமுறையான 'P-TOMS' ஐத் தடுப்பதில் முனைப்பாக  இருந்தது

மார்ச் மற்றும் ஜூலை 2005க்கு இடையில், இது சமாதான முன்னெடுப்புகளின் இறுதி மூச்சாக  இடம் பெற்றது.

2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்கள தேசியவாதத்துடன் ஜே.வி.பி.யின் அதிகரித்து வரும் தொடர்பு பாரம்பரியமான மார்க்சியப் பிரச்சினைகளில் அதன் செயற்பாடுகளை கை விடுவதைக் குறிக்கவில்லை. 2000-2001 பொருளாதார நெருக்கடியினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பின்மை மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த UNF அரசாங்கத்தின் சந்தை சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், விவசாயிகள், வேலையற்றோர் மற்றும் பொதுத் துறை ஊழியர்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து JVP க்கு வளரும் ஆதரவை வழங்கியது. ஒரு கருத்தியல் மற்றும் நடைமுறை மட்டத்தில், ஜே.வி.பி.யின் வெற்றியானது, பெரும்பாலும் தன்னெழுச்சியான பொருளாதார எதிர்ப்பின் இந்த ஆதாரங்களை பரந்துபட்ட சிங்கள தேசியவாத கட்டமைப்பின் கூறுகளாக கட்டமைக்கும் அவர்களின் திறனாக  அமைந்தது.

எனவே, பொருளாதார பூகோளமயமாக்கலுக்கான எதிர்ப்பானது கொள்ளையடிக்கும் நவகாலனித்துவ சக்திகள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச மூலதனத்தின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு எதிரான பரந்துபட்ட எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றியது. இவை அனைத்தும் சேர்ந்து நாட்டை பிளவுபடுத்தி மீண்டும் காலனியாக்க சதி செய்வதாக ஜே.வி.பி குற்றம் சாட்டியது.

சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் சமாதான முன்னெடுப்புகளில் முன்னேற்றம் ஆகியவற்றை நிபந்தனையாகக் கொண்டு சர்வதேச சமூகம் தாராளமான அளவிலான வளர்ச்சி உதவிகளை  வழங்க முன் வந்தது, இந்த தர்க்கத்தை கட்டமைப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் பெரிதும் உதவியது.

ஆளும் ஐ.தே.மு. சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் அதிக உலகளாவிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான பொருளாதார அபிவிருத்தி மூலோபாயத்தின் ஒரு அங்கமாக சமாதான நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் கருதியது போல், ஜே.வி.பி சமாதான முன்னெடுப்புகள் மற்றும் சந்தை சீர்திருத்தங்கள் வெளிநாட்டு சக்திகளின் கூட்டத்தின் ஒருங்கிணைந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும் என்று வாதிட்டது.   

சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிரான அதன் பிரச்சாரத்தில், ஜே.வி.பி தமிழ் தேசியவாதத்தை ஒரு ஜனநாயகமற்ற, இனப் பிரத்தியேகவாதத்தின் பேரினவாத சித்தாந்தமாக வகைப்படுத்தியது; ஒரு பயங்கரவாத அமைப்பால் ஊக்குவிக்கப்பட்ட,  தீவை பிரித்து மீண்டும் கைப்பற்ற வெளிநாட்டு  நவ-காலனித்துவ சக்திகளால் புனையப்பட்ட சதி என்று உருவகித்தது.

2001-2004 காலப் பகுதியில் தமிழ் தேசியவாதம் குறித்த ஜே.வி.பி.யின் கண்ணோட்டம், 1980களின் நடுப்பகுதியில் கட்சியின் நிறுவன தலைவரான ரோகண விஜேவீரவினால் உருவாக்கப்பட்ட ஆய்வறிக்கையால் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. லெனினின் சுயநிர்ணய உரிமை முழுமையானது அல்ல என்று விஜேவீர வாதிட்டார்: கொடுக்கப்பட்ட தேசியவாத இயக்கத்திற்கான ஆதரவு, அது உலக ஏகாதிபத்தியத்திற்கும் கம்யூனிச இயக்கத்திற்கும் அதன் மூலோபாய மதிப்பிற்கும் இடையே நிபந்தனைக்குட்பட்டது;  சில வரலாற்று தருணங்களில், தேசியவாத இயக்கங்கள் முற்போக்கானதாகவும், ஜனநாயகமாகவும், சுதந்திரமாகவும் இருக்கலாம். 

ஆனால் மற்ற நேரங்களில், அவை பிற்போக்குத்தனமான மேட்டுக் குடி  உயரடுக்கின் புகலிடமாக இருந்தாலும் அல்லது மூன்றாம் உலகத்தைப் பிரித்து மீண்டும் காலனித்துவப்படுத்த முயலும் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய சக்திகளின் கைக்கூலியாக இருந்தாலும் தெளிவாக ஆபத்தானவையாக இருக்கலாம். விஜேவீர தமிழ் தேசியவாதம் (தமிழ்நாட்டின் திராவிட இயக்கத்தை இலங்கையின் தமிழீழ இயக்கத்துடன் இணைப்பது) பிந்தைய வகையைச் சேர்ந்தது என்றும், கொள்கை அடிப்படையில் எதிர்க்கத் தகுதியானது என்றும் வலியுறுத்தினார்.

இந்திய மற்றும் இலங்கை தமிழ் தேசியவாதங்களுக்கிடையில் தற்செயலான மற்றும் தவறாக வழி நடத்தும் குழப்பத்திற்கு அப்பால், ஏகாதிபத்திய மற்றும் பெரிய நாடுகளின் அடக்குமுறை மற்றும் ஜனநாயகமற்ற தேசியவாதத்துடன் அடிப்படையில் ஜனநாயக தன்மை வாய்ந்த சிறிய மற்றும் காலனித்துவ நாடுகளின்  தேசியவாதத்தினை வேறுபடுத்தும் லெனினிச பாரம்பரியத்தை திரிபுபடுத்தும் ஒரு சந்தர்ப்பவாத தவறாக விஜேவீரவின் பணி இருந்தது. 

இலங்கை நிலைமைகளில், லெனினின் இந்த மரபுதான், பிரதான நீரோட்ட மார்க்சிச இடதுசாரிகளை வரலாற்று ரீதியாக பாரபட்சம் காட்டப்பட்ட சிறுபான்மையினரின் ஜனநாயக வெளிப்பாடாக தமிழ் தேசியவாதத்தை நோக்கும் பரந்த அனுதாப நிலைக்கு கொண்டு வந்தது. அதற்கு பதிலாக விஜேவீர, தமிழ் தேசியவாதம், ஏகாதிபத்தியத்துடன் உடந்தையாக இருப்பதாக கூறி, ஒரு ஆபத்தான பிற்போக்கு அச்சுறுத்தல் என்று வாதிட்டார்.

தமிழ் தேசியவாத நிகழ்ச்சி நிரலின் மிக மிதமான போக்குகளை கூட அயராத எதிர்ப்பின் மூலம், ஜே.வி.பி., சிங்கள பேரினவாதத்தை உணர்வுபூர்வமாக அலசி, வளர்த்து, பயன் பெற்று, வெளிப்படையான தீவிரவாதிகளுடன் கூட்டணி வைத்து, சிங்கள பெருந் தேசியவாதத்துடன்  மிக மையமான பிரச்சினைகளுக்கு முன்னணி வக்கீலாக மாறியது.

இந்த நடவடிக்கைகளின் அடிப்படையில், ஜே.வி.பி சிறிலங்காவில் பெரும் பகுதியினரால் குறிப்பாக தமிழ் சமூகத்தால், சிங்கள பேரினவாத அமைப்பாக பார்க்கப்படுகிறது.

ஜே.வி.பி.யானது வரலாற்று ரீதியாக சிங்கள-பௌத்தர்களால் ஆனது; அதன் தரவரிசையிலும், மற்றும் தலைமை மட்டத்திலும் அவர்கள் தமிழ் மக்களின் வடக்கு-கிழக்கிற்கான அதிகாரங்களை பரவலாக்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முற்றாக எதிர்க்கின்றனர்.

2024 ஆம் ஆண்டு தனது பிரச்சாரத்தின் போது கூட, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில், 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் எது விதமான உறுதிமொழியையும் வழங்க தாம் விரும்பவில்லை என அநுரகுமார தெளிவுபடுத்தினார். நடந்து கொண்டிருக்கும் இனத்துவ மோதலுக்கு கணிசமான அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வை முன்வைக்க அவர் மறுத்து விட்டார்.

ஜே.வி.பி. கிராமப்புற சிங்கள மக்களை அணி திரட்டி, 2002 – 2006ல் பல்லாயிரக் கணக்கான  சிங்கள இளைஞர்களை பாதுகாப்புப் படைகளில் இணைத்துக் கொண்டார்கள். ஆயுதப் படைகளில் நடுத்தர வரிசை அல்லது மூத்த நிலை தளபதிகள் பலர் ஜே.வி.பி.யால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள். தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பல அட்டூழியக் குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

2009 இல் போர் நிறுத்தத்தை கொண்டு வர எடுத்த முற்சிகளை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்தது.

ஜே.வி.பி.யின் ஆழமான வேரூன்றிய அரசியல் நிலைப்பாடுகள்:

ஒற்றையாட்சி - பாராளுமன்றத்தின் அதிகாரங்களைப் பகிர கூடாது.

தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை அங்கீகரிக்க மறுத்தல்.

அரசியல் விவகாரங்கள் மற்றும் பொருளாதாரத்தில் வெளிநாட்டு தலையீடு வர அனுமதிக்க விடாது தடுத்தல்.

தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையை நிறுவுவதற்கான எந்தவொரு சர்வதேச நடவடிக்கையையும் எதிர்க்க வேண்டும்.

தமிழ் மக்களின் தற்போதைய அவலநிலை "கொதிக்கும் சட்டியில் இருந்து நெருப்புக்குள் குதிக்கப் போகின்றதா?". 

இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி, எதிர்கால ஜனநாயக செயல்முறையை ஒற்றுமையாக எதிர்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையின் வடக்கு-கிழக்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் கோரியபடி பாதிக்கப்பட்ட தமிழர்களின் கருத்துக்கள் மற்றும் முன்னுரிமைகளை அங்கீகரிப்பதுடன் எந்தவொரு அரசியல் தீர்வும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமையை ஒப்புக் கொண்டு கூட்டாட்சிக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.

ஒரு சர்வதேச நடுவர் செயல்முறை மூலம் அரசியல் தீர்வுக்கான  பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்தத் தீர்வைச் செயல்படுத்துவதற்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய  முக்கிய குழுவால் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

சர்வதேச நடுவர்கள், உள்நாட்டுச் சண்டைகள் மற்றும் வன்முறைச் சுழற்சிகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யவும், சமமான மற்றும் நிலையான அமைதியை அடைவதற்கும், பிராந்தியத்தின் புவிசார்-அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் பராமரிக்கவும், ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

மேற்கூறிய அனைத்து நோக்கங்களுக்காகவும் சர்வதேச சமூகம் காலக்கெடுவுடன் செயல்படுத்தும் திட்டத்தை அமைக்க வேண்டும். என்றுள்ளது. 

சமஸ்டியை ஏற்காத - சமாதான முயற்சிகளை எதிர்த்த ஜேவிபி - பிரித்தானிய தமிழர் பேரவை அறிக்கை ஜேவிபியின் தமிழர் விரோத கடந்த காலங்கள் சமாதான முயற்சிகளை குழப்புவதற்கு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவைஇலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி எதிர்கால ஜனநாய செயல்முறையை ஒற்றுமையாக எதிர்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதுபிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவதுசிறிலங்காவில் அடுத்தடுத்து வரும் நெறிமுறை அற்ற அரசாங்கங்களின் ஆட்சியின் கீழ் போராடும் போது,  கட்டமைப்பு ரீதியான தீவிரமான மாற்றங்களை கொண்டு வரும் வாக்குறுதியுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் (AKD) வருகை, சிறிலங்காவில் உள்ள மக்களுக்கு பெரும் நிம்மதியாகத் தெரிகிறது. தமிழ் மக்களுக்கு எதிரான 75 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறை சுழற்சி மற்றும் இனவழிப்புக்கு இந்த உற்சாகம்  முடிவு கட்டுமாஇந்த அறிக்கை AKD இன் அடித் தளமான ஜனதா விமுக்தி பெரமுனாவின் (ஜேவிபி) மோசமான கடந்த காலத்தை வெளி கொண்டு வருகிறது.இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க (AKD) யார்,  அவருடைய பின்னணி என்ன அவர் கூறுவது போல் அவர் ஒரு மார்க்சிஸ்ட் அல்ல; இலங்கை அரசியலில் மையக் கோட்டிற்கு  இடது புறம் சாய்ந்த  ஒரு சிங்கள தேசியவாதி. அவரது அரசியல் வாழ்க்கை ஜனாதிபதியாக  அவரின்  கீழ் இன்னும் வரவிருக்கின்ற  விஷயங்களுக்கு சிறந்த சான்றாக உள்ளது.பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) இந்த அறிக்கையில் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) மற்றும் AKD-யின்  உண்மையான முகத்தை ஆராய்ந்து  தமிழ் மக்களின் முன் வைக்க விரும்புகிறது.AKD தனது மாணவ பராயத்தில் JVPயில் சேர்ந்தார். அது தன்னை ஒரு தமிழ்-எதிர்ப்பு, மேற்கு-எதிர்ப்பு சித்தாந்தம் கொண்ட,  இந்திய-எதிர்ப்பு, சிங்கள பௌத்த அடிப்படைவாத குழுவாக கட்டமைத்து உள்ளது.1987இல் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வன்முறை பிரச்சாரம் செய்தது.ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி (UNF) அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையிலான நோர்வே சமாதான முன்னெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தான் 2001-2004 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரதான அரசியல் சக்தியாக ஜே.வி.பி மகத்தான முக்கியத்துவத்தைப் பெற்றது.பெப்ரவரி 2002 போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜே.வி.பி., சர்வதேச ரீதியில் அனுசரணையளிக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிரான சக்தி வாய்ந்த மற்றும் ஒத்திசைவான கருத்தியல்-அரசியல் வேலைத் திட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. அது 2003இல் கொழும்பில் மாதத்திற்கு ஒரு முறை என்ற அளவில் பாரிய வீதி ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தது. இது கொழும்பு தலைநகரை பல சந்தர்ப்பங்களில் முற்றிலுமாக ஸ்தம்பிக்க வைத்தது. UNF இன் சந்தை சீர்திருத்தக் கொள்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் பொருளாதார அதிருப்தியின் வேகத்தை வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டது. 2003இன் பிற்பகுதியிலும் 2004இன் தொடக்கத்திலும் சுகாதாரத் துறை மற்றும் ரயில்வேயில் தொடர்ச்சியான பொதுத் துறை வேலை நிறுத்தங்களைத் தூண்டுவதற்கு தொழிற்சங்க இயக்கத்தில் அதன் செல்வாக்கைப் பயன்படுத்தியது. எனவே, ஜே.வி.பி., சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிராக பொதுக் கருத்தைத் திரட்டி ஒன்றிணைப்பதில் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்ததுடன், ஜனாதிபதி குமாரதுங்கவின் மீதான வளர்ந்து வரும் அழுத்தத்திற்கு பெரும் ஆதரவினை வழங்கியது. இது ஐ.தே.மு அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வதில் சனாதிபதி சந்ந்திரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது.இதன் தொடர்ச்சியாக ஆற்றல் மிக்க ஏப்ரல் 2004 தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், UNF அரசாங்கத்தின் தோல்வியையும், சமாதான முன்னெடுப்புகளின்  சீர்குலைவையும் உறுதி செய்தது. 2004 ஏப்ரலுக்குப் பின்னரும், புதிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) அரசாங்கத்திற்குள் சமரசமற்ற பிடிவாதமான கூட்டணிப் பங்காளியாக ஜே.வி.பி.யின் செல்வாக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் அமைதிக்கான  அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததில் குறிப்பிடத் தக்க பங்கைக் கொண்டிருந்தது.சமாதானப் பேச்சுக்களை ஆதரிக்க உடன்படுவதற்கு அவர்கள் (ஜேவிபி) நிறைவேற்ற முடியாத முன் நிபந்தனைகளை முன் வைத்தனர்.  கூட்டு சுனாமி உதவி விநியோகம் (PTOMS – Post Tsunami Operational Management Structure) தொடர்பாக விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு உடன்பாட்டையும் சகித்துக் கொள்ள மறுத்து,  நவம்பர் 2005 இல் மகிந்த இராஜபக்ஷவின் வெற்றிகரமான ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை சமாதானத்திற்கு எதிரானதாக மேடையாக மாற்றினார்கள்.2006ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஜே.வி.பி.,   இராணுவத் தீர்வை வெளிப்படையாக முன் வைத்து, இறுதியாக ஆகஸ்ட் 2006இல் போரை மீண்டும் தொடங்க அரசாங்கத்தை வலியுறுத்தியது.  மார்க்சியம் மற்றும் சிங்கள தேசியவாதத்தின் கலவையானது ஜே.வி.பி.க்கு ஒரு பலமாக மாறி, சிங்கள தேசிய சக்தியாக உருவெடுக்க உதவியது.ஜூன் 1998 முதல் டிசம்பர் 1999 வரை, ஜே.வி.பி., அவர்களின் நிகழ்ச்சி நிரலின் சிங்கள தேசியவாத கூறுகளை தற்காலிகமாக தவிர்த்ததுடன், ஆளும் மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் தீவிர இடது பக்கம் தங்களை நிலைநிறுத்திய மூன்று சிறிய கட்சிகளுடன் ஒரு பரந்த கூட்டணி அமைத்தது. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய மாதங்களில், ஜே.வி.பி. இந்த இடதுசாரிக் கூட்டாளிகளுடன் இருந்து முற்றாகப் பிரிந்து, மார்க்சியத்திலிருந்து சிங்கள தேசியவாதத்தை நோக்கி கருத்தியல் வலியுறுத்தலை மாற்றியது.1999ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, குறிப்பாக 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆனையிறவில் விடுதலைப் புலிகளின் அற்புதமான இராணுவ வெற்றிகள் அரசாங்கத்தின் இராணுவ நிகழ்ச்சி நிரலின் நம்பகத் தன்மையை முற்றிலுமாக சீர்குலைத்திருந்தன. இது நோர்வேயின் நுழைவுக்கும், மோதலில் மத்தியஸ்தராக ஏற்றுக் கொள்ளும் அங்கீகாரத்துக்கும்  மற்றும் விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியத்திற்கும் ஒரு சந்தர்ப்பமளித்தது. இது 1995ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வந்த அரசாங்கத்தின் முக்கிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் அதிகாரப் பகிர்வுப் பொதி  இறுதியாக ஆகஸ்ட் 2000இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட ஏதுவானது. அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வு மற்றும் வெளிநாட்டு மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் ஆகிய இரண்டு யோசனைகளும் நீண்ட காலமாக சிங்கள தேசியவாதிகளுக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது. இராணுவ வெற்றி தவிர்த்த எந்த தீர்வும், சிங்கள தேசியவாதிகளுக்கு  முற்றிலும் எதிரானதாக இருந்தது.பிரதான எதிர்க் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியானது, அதிகாரப் பகிர்வு, வெளிநாட்டு மத்தியஸ்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளின் அவசியம் குறித்து அரசாங்கத்துடன் பரந்த உடன்பாட்டில் இருந்ததால்,   சமாதான நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான  சிங்கள தேசியவாத  வகிபாகத்தினை ஜே.வி.பி. பிடிப்பதற்கு பரந்த அளவில் ஒரு வெளி திறந்து விடப்பட்டது.   அக்டோபர் 2000இல் வரவிருந்த பாராளுமன்றத் தேர்தல்களின் பின்னணியில், வளர்ந்து வரும் சிங்கள தேசியவாத வெளியின் சுவீகரிப்பு, 1994க்குப் பிந்தைய புத்துயிர் பெற்ற ஜே.வி.பி.க்கு அதன் கவனமாக வளர்த்தெடுக்கப்பட்ட அடித்தள பலத்தை தேசிய அரங்கிற்கு மாற்றுவதற்கான முதல் வாய்ப்பை வழங்கியது. உண்மையில் ஜே.வி.பி.க்கு அதன் 35 ஆண்டு கால வரலாற்றில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முதல் அர்த்தமுள்ள வாய்ப்பாக அது அமைந்தது. மேலும் ஆளும் கூட்டணியின் இடதுசாரிகளில் இருந்து அதிருப்தியடைந்த வாக்காளர்களை வெளியேற்றி பெரும் வெற்றியை ஜே.வி.பி. பெற்றது.2000 ஆம் ஆண்டின் முற் பகுதிக்கும் 2005ஆம் ஆண்டின் பிற் பகுதிக்கும் இடையில், சமாதான முன்னெடுப்புகளை மையமாகக் கொண்ட தொடர்ச்சியான பிரச்சாரங்களில், சிங்கள தேசியவாத நிலப் பரப்பில் மார்ச் 2000 முதல், நோர்வே மத்தியஸ்தர்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிராக ஜே.வி.பி நீண்ட பிரச்சாரத்தை ஆரம்பித்தது. சில மாதங்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 2000இல், ஜனாதிபதி குமாரதுங்கவின் புதிய அரசியலமைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு முன்மொழிவுகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களில் ஜே.வி.பி மீண்டும் முன்னணியில் இருந்தது.டிசம்பர் 2001 தேர்தலுக்குப் பின்னர், விரக்தியடைந்த மற்றும் மனச் சோர்வடைந்த SLFPக்கு எதிராக ஜே.வி.பி.,   உற்சாகமாக இருந்ததுடன், ஒன்றிணைவதிலும் கவனம் செலுத்துவதிலும், வளர்ச்சியடைந்து வரும் போர்நிறுத்தம் மற்றும் சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிர்ப்பை வழிநடத்துவதிலும் முன்னின்றது.அடுத்த மாதங்களில், 2002 பெப்ரவரியில் முறையான போர் நிறுத்த உடன்படிக்கையை (CFA), செப்டம்பர் 2002 மற்றும் மார்ச் 2003 க்கு இடையில் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை திட்டவட்டமாக எதிர்ப்பதற்கு முன்முயற்சியை எடுத்துக்கொண்டு, ஜே.வி.பி மற்ற எதிர்க் கட்சிகளை பின் தள்ளி திறம்பட முன்னேறியது.  ஏப்ரல் 2004 தேர்தலுக்குப் பின்னரும் கூட, 2004 மே மற்றும் டிசம்பர் மாதங்களில் LTTE உடனான எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் மீண்டும் தொடங்குவதற்கு ஜே.வி.பி கடும் விரோதமாக இருந்தது.சுனாமிக்குப் பிந்தைய உதவிப் பகிர்வு பொறிமுறையான 'P-TOMS' ஐத் தடுப்பதில் முனைப்பாக  இருந்ததுமார்ச் மற்றும் ஜூலை 2005க்கு இடையில், இது சமாதான முன்னெடுப்புகளின் இறுதி மூச்சாக  இடம் பெற்றது.2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்கள தேசியவாதத்துடன் ஜே.வி.பி.யின் அதிகரித்து வரும் தொடர்பு பாரம்பரியமான மார்க்சியப் பிரச்சினைகளில் அதன் செயற்பாடுகளை கை விடுவதைக் குறிக்கவில்லை. 2000-2001 பொருளாதார நெருக்கடியினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பின்மை மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த UNF அரசாங்கத்தின் சந்தை சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், விவசாயிகள், வேலையற்றோர் மற்றும் பொதுத் துறை ஊழியர்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து JVP க்கு வளரும் ஆதரவை வழங்கியது. ஒரு கருத்தியல் மற்றும் நடைமுறை மட்டத்தில், ஜே.வி.பி.யின் வெற்றியானது, பெரும்பாலும் தன்னெழுச்சியான பொருளாதார எதிர்ப்பின் இந்த ஆதாரங்களை பரந்துபட்ட சிங்கள தேசியவாத கட்டமைப்பின் கூறுகளாக கட்டமைக்கும் அவர்களின் திறனாக  அமைந்தது.எனவே, பொருளாதார பூகோளமயமாக்கலுக்கான எதிர்ப்பானது கொள்ளையடிக்கும் நவகாலனித்துவ சக்திகள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச மூலதனத்தின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு எதிரான பரந்துபட்ட எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றியது. இவை அனைத்தும் சேர்ந்து நாட்டை பிளவுபடுத்தி மீண்டும் காலனியாக்க சதி செய்வதாக ஜே.வி.பி குற்றம் சாட்டியது.சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் சமாதான முன்னெடுப்புகளில் முன்னேற்றம் ஆகியவற்றை நிபந்தனையாகக் கொண்டு சர்வதேச சமூகம் தாராளமான அளவிலான வளர்ச்சி உதவிகளை  வழங்க முன் வந்தது, இந்த தர்க்கத்தை கட்டமைப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் பெரிதும் உதவியது.ஆளும் ஐ.தே.மு. சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் அதிக உலகளாவிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான பொருளாதார அபிவிருத்தி மூலோபாயத்தின் ஒரு அங்கமாக சமாதான நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் கருதியது போல், ஜே.வி.பி சமாதான முன்னெடுப்புகள் மற்றும் சந்தை சீர்திருத்தங்கள் வெளிநாட்டு சக்திகளின் கூட்டத்தின் ஒருங்கிணைந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும் என்று வாதிட்டது.   சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிரான அதன் பிரச்சாரத்தில், ஜே.வி.பி தமிழ் தேசியவாதத்தை ஒரு ஜனநாயகமற்ற, இனப் பிரத்தியேகவாதத்தின் பேரினவாத சித்தாந்தமாக வகைப்படுத்தியது; ஒரு பயங்கரவாத அமைப்பால் ஊக்குவிக்கப்பட்ட,  தீவை பிரித்து மீண்டும் கைப்பற்ற வெளிநாட்டு  நவ-காலனித்துவ சக்திகளால் புனையப்பட்ட சதி என்று உருவகித்தது.2001-2004 காலப் பகுதியில் தமிழ் தேசியவாதம் குறித்த ஜே.வி.பி.யின் கண்ணோட்டம், 1980களின் நடுப்பகுதியில் கட்சியின் நிறுவன தலைவரான ரோகண விஜேவீரவினால் உருவாக்கப்பட்ட ஆய்வறிக்கையால் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. லெனினின் சுயநிர்ணய உரிமை முழுமையானது அல்ல என்று விஜேவீர வாதிட்டார்: கொடுக்கப்பட்ட தேசியவாத இயக்கத்திற்கான ஆதரவு, அது உலக ஏகாதிபத்தியத்திற்கும் கம்யூனிச இயக்கத்திற்கும் அதன் மூலோபாய மதிப்பிற்கும் இடையே நிபந்தனைக்குட்பட்டது;  சில வரலாற்று தருணங்களில், தேசியவாத இயக்கங்கள் முற்போக்கானதாகவும், ஜனநாயகமாகவும், சுதந்திரமாகவும் இருக்கலாம். ஆனால் மற்ற நேரங்களில், அவை பிற்போக்குத்தனமான மேட்டுக் குடி  உயரடுக்கின் புகலிடமாக இருந்தாலும் அல்லது மூன்றாம் உலகத்தைப் பிரித்து மீண்டும் காலனித்துவப்படுத்த முயலும் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய சக்திகளின் கைக்கூலியாக இருந்தாலும் தெளிவாக ஆபத்தானவையாக இருக்கலாம். விஜேவீர தமிழ் தேசியவாதம் (தமிழ்நாட்டின் திராவிட இயக்கத்தை இலங்கையின் தமிழீழ இயக்கத்துடன் இணைப்பது) பிந்தைய வகையைச் சேர்ந்தது என்றும், கொள்கை அடிப்படையில் எதிர்க்கத் தகுதியானது என்றும் வலியுறுத்தினார்.இந்திய மற்றும் இலங்கை தமிழ் தேசியவாதங்களுக்கிடையில் தற்செயலான மற்றும் தவறாக வழி நடத்தும் குழப்பத்திற்கு அப்பால், ஏகாதிபத்திய மற்றும் பெரிய நாடுகளின் அடக்குமுறை மற்றும் ஜனநாயகமற்ற தேசியவாதத்துடன் அடிப்படையில் ஜனநாயக தன்மை வாய்ந்த சிறிய மற்றும் காலனித்துவ நாடுகளின்  தேசியவாதத்தினை வேறுபடுத்தும் லெனினிச பாரம்பரியத்தை திரிபுபடுத்தும் ஒரு சந்தர்ப்பவாத தவறாக விஜேவீரவின் பணி இருந்தது. இலங்கை நிலைமைகளில், லெனினின் இந்த மரபுதான், பிரதான நீரோட்ட மார்க்சிச இடதுசாரிகளை வரலாற்று ரீதியாக பாரபட்சம் காட்டப்பட்ட சிறுபான்மையினரின் ஜனநாயக வெளிப்பாடாக தமிழ் தேசியவாதத்தை நோக்கும் பரந்த அனுதாப நிலைக்கு கொண்டு வந்தது. அதற்கு பதிலாக விஜேவீர, தமிழ் தேசியவாதம், ஏகாதிபத்தியத்துடன் உடந்தையாக இருப்பதாக கூறி, ஒரு ஆபத்தான பிற்போக்கு அச்சுறுத்தல் என்று வாதிட்டார்.தமிழ் தேசியவாத நிகழ்ச்சி நிரலின் மிக மிதமான போக்குகளை கூட அயராத எதிர்ப்பின் மூலம், ஜே.வி.பி., சிங்கள பேரினவாதத்தை உணர்வுபூர்வமாக அலசி, வளர்த்து, பயன் பெற்று, வெளிப்படையான தீவிரவாதிகளுடன் கூட்டணி வைத்து, சிங்கள பெருந் தேசியவாதத்துடன்  மிக மையமான பிரச்சினைகளுக்கு முன்னணி வக்கீலாக மாறியது.இந்த நடவடிக்கைகளின் அடிப்படையில், ஜே.வி.பி சிறிலங்காவில் பெரும் பகுதியினரால் குறிப்பாக தமிழ் சமூகத்தால், சிங்கள பேரினவாத அமைப்பாக பார்க்கப்படுகிறது.ஜே.வி.பி.யானது வரலாற்று ரீதியாக சிங்கள-பௌத்தர்களால் ஆனது; அதன் தரவரிசையிலும், மற்றும் தலைமை மட்டத்திலும் அவர்கள் தமிழ் மக்களின் வடக்கு-கிழக்கிற்கான அதிகாரங்களை பரவலாக்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முற்றாக எதிர்க்கின்றனர்.2024 ஆம் ஆண்டு தனது பிரச்சாரத்தின் போது கூட, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில், 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் எது விதமான உறுதிமொழியையும் வழங்க தாம் விரும்பவில்லை என அநுரகுமார தெளிவுபடுத்தினார். நடந்து கொண்டிருக்கும் இனத்துவ மோதலுக்கு கணிசமான அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வை முன்வைக்க அவர் மறுத்து விட்டார்.ஜே.வி.பி. கிராமப்புற சிங்கள மக்களை அணி திரட்டி, 2002 – 2006ல் பல்லாயிரக் கணக்கான  சிங்கள இளைஞர்களை பாதுகாப்புப் படைகளில் இணைத்துக் கொண்டார்கள். ஆயுதப் படைகளில் நடுத்தர வரிசை அல்லது மூத்த நிலை தளபதிகள் பலர் ஜே.வி.பி.யால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள். தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பல அட்டூழியக் குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.2009 இல் போர் நிறுத்தத்தை கொண்டு வர எடுத்த முற்சிகளை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்தது.ஜே.வி.பி.யின் ஆழமான வேரூன்றிய அரசியல் நிலைப்பாடுகள்:ஒற்றையாட்சி - பாராளுமன்றத்தின் அதிகாரங்களைப் பகிர கூடாது.தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை அங்கீகரிக்க மறுத்தல்.அரசியல் விவகாரங்கள் மற்றும் பொருளாதாரத்தில் வெளிநாட்டு தலையீடு வர அனுமதிக்க விடாது தடுத்தல்.தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையை நிறுவுவதற்கான எந்தவொரு சர்வதேச நடவடிக்கையையும் எதிர்க்க வேண்டும்.தமிழ் மக்களின் தற்போதைய அவலநிலை "கொதிக்கும் சட்டியில் இருந்து நெருப்புக்குள் குதிக்கப் போகின்றதா". இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி, எதிர்கால ஜனநாயக செயல்முறையை ஒற்றுமையாக எதிர்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.இலங்கையின் வடக்கு-கிழக்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் கோரியபடி பாதிக்கப்பட்ட தமிழர்களின் கருத்துக்கள் மற்றும் முன்னுரிமைகளை அங்கீகரிப்பதுடன் எந்தவொரு அரசியல் தீர்வும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமையை ஒப்புக் கொண்டு கூட்டாட்சிக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.ஒரு சர்வதேச நடுவர் செயல்முறை மூலம் அரசியல் தீர்வுக்கான  பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்தத் தீர்வைச் செயல்படுத்துவதற்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய  முக்கிய குழுவால் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.சர்வதேச நடுவர்கள், உள்நாட்டுச் சண்டைகள் மற்றும் வன்முறைச் சுழற்சிகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யவும், சமமான மற்றும் நிலையான அமைதியை அடைவதற்கும், பிராந்தியத்தின் புவிசார்-அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் பராமரிக்கவும், ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.மேற்கூறிய அனைத்து நோக்கங்களுக்காகவும் சர்வதேச சமூகம் காலக்கெடுவுடன் செயல்படுத்தும் திட்டத்தை அமைக்க வேண்டும். என்றுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement