• Sep 21 2024

தமது நண்பர்களிற்கு எதிராக ஆயுதத்தினை உயர்த்தியவர்கள் துரோகிகள்..அதிபர் புடின் சீற்றம்..! samugammedia

Tamil nila / Jun 24th 2023, 5:02 pm
image

Advertisement

ஆயுதமேந்திய ஒரு கிளர்ச்சிக்கு வழி செய்து தமது  நண்பர்களிற்கு  எதிராக ஆயுதத்தினை உயர்த்தியமை  துரோகம் என அதிபர் புடின் தெரிவித்துள்ளார். 

ரஷ்ய - உக்ரைன் போரானது ஓராண்டுகளை கடந்து இடம்பெற்று வரும் நிலையில், தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், ரஷ்ய நாட்டிற்கான தனியார் இராணுவ கூலிப்படை தலைவராக உக்ரைனுக்கு எதிராக, அவரது படையும் போரில் ஈடுபட்டு வந்தது.

இவ்வாறான சூழலில், ரஷ்ய  இராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரஷ்யாவிற்கு  எதிராக பெரும் கிளர்ச்சி ஒன்றிற்கு பிரிகோசின் அழைப்பு விடுத்துள்ளார். 

தற்சமயம்  ரஷ்யாவின்  தெற்கிலுள்ள ரோஸ்டோவ் ஆன் டான் நகரிலுள்ள ரஷ்ய  இராணுவ படைகள், தனது கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். 

இவ்வாறான சூழலில் இன்றைய தினம்  அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பொழுது, 

கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் அறிவித்திருக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியிலிருந்து நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் ஆயுதமேந்திய கிளர்ச்சி,  இந்தக் கலகம் தமக்கு கொடிய ஒரு அச்சுறுத்தல் என்றும் அதற்கு  பதிலளிக்கும் விதமாக கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

கிளர்ச்சிக்கு காரணமான அனைவரும் தவிர்த்து கொள்ள முடியாத  தண்டனையை அனுபவிப்பார்கள். அத்துடன், ஆயுதப்படைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு வேண்டிய உத்தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவதை  நிறுத்துங்கள். மேற்கத்திய நாடுகளின் முழு இராணுவ, பொருளாதார மற்றும் தகவல் இயந்திரம் ரஷ்யாவிற்கு  எதிராக பயன்படுத்தப்படுகின்றது.

இந்தப் போரில் எமது  மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும் போது, அனைத்து சக்திகளின் ஒருங்கிணைப்பு, ஒற்றுமை மற்றும்  பொறுப்பு போன்றன தேவைப்படுகின்றது. 

அத்தூளோடு, ரஷ்யா,  உக்ரைனில் தன் எதிர்காலத்திற்கான மிகக் கடினமான போரில் ஈடுபட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஆயுதமேந்திய கிளர்ச்சி நாட்டிற்கும், மக்களிற்கு மிக பெரிய அடி. அதனால் அது கண்டிப்பிற்குரியது. 

 இவ்வாறாக ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு சதி செய்து ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் தனது நண்பர்களிற்கு  எதிராக ஆயுதங்களை உயர்த்தியவர் எமது நாட்டை  காட்டிக் கொடுத்துள்ளனர். 

அதனால், அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள் எனவும்  தெரிவித்துள்ளார்.

தமது நண்பர்களிற்கு எதிராக ஆயுதத்தினை உயர்த்தியவர்கள் துரோகிகள்.அதிபர் புடின் சீற்றம். samugammedia ஆயுதமேந்திய ஒரு கிளர்ச்சிக்கு வழி செய்து தமது  நண்பர்களிற்கு  எதிராக ஆயுதத்தினை உயர்த்தியமை  துரோகம் என அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய - உக்ரைன் போரானது ஓராண்டுகளை கடந்து இடம்பெற்று வரும் நிலையில், தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், ரஷ்ய நாட்டிற்கான தனியார் இராணுவ கூலிப்படை தலைவராக உக்ரைனுக்கு எதிராக, அவரது படையும் போரில் ஈடுபட்டு வந்தது.இவ்வாறான சூழலில், ரஷ்ய  இராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரஷ்யாவிற்கு  எதிராக பெரும் கிளர்ச்சி ஒன்றிற்கு பிரிகோசின் அழைப்பு விடுத்துள்ளார். தற்சமயம்  ரஷ்யாவின்  தெற்கிலுள்ள ரோஸ்டோவ் ஆன் டான் நகரிலுள்ள ரஷ்ய  இராணுவ படைகள், தனது கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறான சூழலில் இன்றைய தினம்  அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பொழுது, கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் அறிவித்திருக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியிலிருந்து நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் ஆயுதமேந்திய கிளர்ச்சி,  இந்தக் கலகம் தமக்கு கொடிய ஒரு அச்சுறுத்தல் என்றும் அதற்கு  பதிலளிக்கும் விதமாக கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிளர்ச்சிக்கு காரணமான அனைவரும் தவிர்த்து கொள்ள முடியாத  தண்டனையை அனுபவிப்பார்கள். அத்துடன், ஆயுதப்படைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு வேண்டிய உத்தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவதை  நிறுத்துங்கள். மேற்கத்திய நாடுகளின் முழு இராணுவ, பொருளாதார மற்றும் தகவல் இயந்திரம் ரஷ்யாவிற்கு  எதிராக பயன்படுத்தப்படுகின்றது.இந்தப் போரில் எமது  மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும் போது, அனைத்து சக்திகளின் ஒருங்கிணைப்பு, ஒற்றுமை மற்றும்  பொறுப்பு போன்றன தேவைப்படுகின்றது. அத்தூளோடு, ரஷ்யா,  உக்ரைனில் தன் எதிர்காலத்திற்கான மிகக் கடினமான போரில் ஈடுபட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஆயுதமேந்திய கிளர்ச்சி நாட்டிற்கும், மக்களிற்கு மிக பெரிய அடி. அதனால் அது கண்டிப்பிற்குரியது.  இவ்வாறாக ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு சதி செய்து ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் தனது நண்பர்களிற்கு  எதிராக ஆயுதங்களை உயர்த்தியவர் எமது நாட்டை  காட்டிக் கொடுத்துள்ளனர். அதனால், அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள் எனவும்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement