• Apr 22 2025

நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கானோர் கைது!

Chithra / Apr 13th 2025, 8:45 pm
image

 

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 1,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மதுவரித் திணைக்களத்தால் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் நேற்று (12) வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி சோதனை நடவடிக்கைகளின் போது, ​​மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அனுமதிப்பத்திரம் பெற்ற மூன்று மதுபான விற்பனை நிலையங்களை சீல் வைக்கவும் மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கானோர் கைது  நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 1,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மதுவரித் திணைக்களத்தால் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் நேற்று (12) வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேற்படி சோதனை நடவடிக்கைகளின் போது, ​​மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கமைய, அனுமதிப்பத்திரம் பெற்ற மூன்று மதுபான விற்பனை நிலையங்களை சீல் வைக்கவும் மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement