• Nov 22 2024

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் – பொலிஸ் மா அதிபர் விசேட நடவடிக்கை!

Chithra / Jul 22nd 2024, 9:32 am
image

 

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு காணப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய முறை தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கும் நோக்கில் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் பின்னர் இந்நாட்டு ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ்மா அதிபர் அதிக அவதானம் செலுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவினர் வெளியிட்டுள்ளதாக தெரிவித்து, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் செயலாளர் சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன ஆகியோர் சமீபத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி, சபாநாயகர் பொலிஸ்மா அதிபரை அழைத்து அவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ள நிலையில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸ்மா அதிபர் அதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் – பொலிஸ் மா அதிபர் விசேட நடவடிக்கை  ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு காணப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தீர்மானித்துள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய முறை தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கும் நோக்கில் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் பின்னர் இந்நாட்டு ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ்மா அதிபர் அதிக அவதானம் செலுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவினர் வெளியிட்டுள்ளதாக தெரிவித்து, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் செயலாளர் சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன ஆகியோர் சமீபத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.அதன்படி, சபாநாயகர் பொலிஸ்மா அதிபரை அழைத்து அவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ள நிலையில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸ்மா அதிபர் அதன்போது தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement