• Nov 26 2024

திருகோணமலையில் சமூக செயற்பாட்டளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்

Tharun / May 16th 2024, 6:30 pm
image

திருகோணமலை - வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களுக்கு  இரவோடு இரவாக வீடுவாகச் சென்று அச்சுறுத்தப்பட்டதாக தெரிய வருகின்றது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி பொது மக்கள் அனுபத்த வலிகளை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை வெருகல் பகுதியில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் இன்றையதினம் (16) நடாத்த திட்டமிட்டிருந்ததாக தெரிய வருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் (15) இரவு 8.30 மணிக்குப் பின்னர் குறித்த சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்குச் சென்ற ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபர்களிடம் தடையுத்தரவு பெறப்பட்டிருப்பதாகக்கூறி தடையுத்தரவை வழங்காமல் சம்பந்தப்பட்ட நபர்கள் உட்பட பலருடைய பெயர்களையும் வாசித்து காண்பித்ததாகவும் தெரிய வருகின்றது.

குறித்த தடையை மீறி நிகழ்வை முன்னெடுப்பீர்களாக இருந்தால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின்கீழ் குறைந்தது 6 மாதங்களுக்கு பிணை எடுக்க முடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்யப்படும் என அச்சுறுத்தியதாகவும் தெரிய வருகின்றது. அத்துடன் கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை தாங்கள் தடுக்கவில்லை எனவும் தற்போது அதனை தடுக்க வேண்டிய அழுத்தம் இருப்பதாகவும் அதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் சமூக செயற்பாட்டளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் திருகோணமலை - வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களுக்கு  இரவோடு இரவாக வீடுவாகச் சென்று அச்சுறுத்தப்பட்டதாக தெரிய வருகின்றது.முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி பொது மக்கள் அனுபத்த வலிகளை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை வெருகல் பகுதியில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் இன்றையதினம் (16) நடாத்த திட்டமிட்டிருந்ததாக தெரிய வருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் (15) இரவு 8.30 மணிக்குப் பின்னர் குறித்த சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்குச் சென்ற ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபர்களிடம் தடையுத்தரவு பெறப்பட்டிருப்பதாகக்கூறி தடையுத்தரவை வழங்காமல் சம்பந்தப்பட்ட நபர்கள் உட்பட பலருடைய பெயர்களையும் வாசித்து காண்பித்ததாகவும் தெரிய வருகின்றது.குறித்த தடையை மீறி நிகழ்வை முன்னெடுப்பீர்களாக இருந்தால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின்கீழ் குறைந்தது 6 மாதங்களுக்கு பிணை எடுக்க முடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்யப்படும் என அச்சுறுத்தியதாகவும் தெரிய வருகின்றது. அத்துடன் கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை தாங்கள் தடுக்கவில்லை எனவும் தற்போது அதனை தடுக்க வேண்டிய அழுத்தம் இருப்பதாகவும் அதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement