• Dec 09 2024

Sharmi / Sep 30th 2024, 8:37 am
image

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள LB3 பகுதியில் உள்ள வீதியில் பட்டா ரக வாகனத்தில் பயணித்தோர் மீது யானை தாக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று(30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மூதூர் தள வைத்தியசாலையிலும் ஒருவர் சேருநுவர வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பட்டா ரக வாகனத்தில் மஹாவலி கங்கை பகுதிக்கு மணல் ஏற்றுவதற்காக மூவர் சென்றுள்ளனர்.

இதன்போது வீதியில் வைத்து வாகனத்தை மறித்து யானை தாக்குதல் நடத்தியதிலேயே மூவரும் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமலையில் யானை தாக்கி மூவர் படுகாயம். திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள LB3 பகுதியில் உள்ள வீதியில் பட்டா ரக வாகனத்தில் பயணித்தோர் மீது யானை தாக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவம் இன்று(30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.இச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மூதூர் தள வைத்தியசாலையிலும் ஒருவர் சேருநுவர வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த பட்டா ரக வாகனத்தில் மஹாவலி கங்கை பகுதிக்கு மணல் ஏற்றுவதற்காக மூவர் சென்றுள்ளனர்.இதன்போது வீதியில் வைத்து வாகனத்தை மறித்து யானை தாக்குதல் நடத்தியதிலேயே மூவரும் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement