• Oct 18 2024

மலேசியாவில் இலங்கையர்கள் மூவர் கொலை: சந்தேக நபர் சிறையில் மரணம் samugammedia

Chithra / Oct 3rd 2023, 8:30 am
image

Advertisement

 

மலேசியாவின், செந்தூலில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் (இலங்கைத் தம்பதியின் கணவர்) பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக கோலாலம்பூர் பொலிஸ் தலைமையக அதிகாரி டத்தோ அல்லுடின் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.

மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இரண்டு பிரதான சந்தேக நபர்களுக்கு கொலைகளை செய்வதற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் மேலும் மூன்று இலங்கையர்களும், பாகிஸ்தானியரும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

நான்கு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்திய போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு முக்கிய சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்துள்ளது.

உயிரிழந்த இலங்கையர் தவிர மேலும் ஆறு இலங்கையர்களும் பாகிஸ்தானியர் ஒருவரும் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள்'' என தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் இலங்கையர்கள் மூவர் கொலை: சந்தேக நபர் சிறையில் மரணம் samugammedia  மலேசியாவின், செந்தூலில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் (இலங்கைத் தம்பதியின் கணவர்) பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக கோலாலம்பூர் பொலிஸ் தலைமையக அதிகாரி டத்தோ அல்லுடின் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.இரண்டு பிரதான சந்தேக நபர்களுக்கு கொலைகளை செய்வதற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் மேலும் மூன்று இலங்கையர்களும், பாகிஸ்தானியரும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர்.நான்கு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்திய போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு முக்கிய சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்துள்ளது.உயிரிழந்த இலங்கையர் தவிர மேலும் ஆறு இலங்கையர்களும் பாகிஸ்தானியர் ஒருவரும் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள்'' என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement