• Apr 02 2025

பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி கோர விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Nov 19th 2024, 11:17 am
image

 

கினிகத்தேன - நாவலப்பிட்டி பிரதான வீதியில்  பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மாணவர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று (18) மாலை  அரச பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் வேன் ஒன்றுடன் ஒன்று மோதிய இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பாடசாலை மாணவர்கள் இருவர் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் காயமடைந்து கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேன நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட வேன், அருகில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதை அடுத்து, முச்சக்கர வண்டியும் பேருந்துடன் மோதி பின்னர் குறுக்கே உருண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் பேருந்தும் முச்சக்கரவண்டியும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி கோர விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி  கினிகத்தேன - நாவலப்பிட்டி பிரதான வீதியில்  பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மாணவர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று (18) மாலை  அரச பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் வேன் ஒன்றுடன் ஒன்று மோதிய இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பாடசாலை மாணவர்கள் இருவர் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் காயமடைந்து கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேன நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட வேன், அருகில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதை அடுத்து, முச்சக்கர வண்டியும் பேருந்துடன் மோதி பின்னர் குறுக்கே உருண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பேருந்தும் முச்சக்கரவண்டியும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement