• Apr 04 2025

35 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி; 21 வயது யுவதி சாவு..! மூவர் வைத்தியசாலையில்

Chithra / May 6th 2024, 8:21 am
image

கண்டி - பன்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுகங்கை அரத்தன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதான யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பன்வில, தவலந்தன்ன - ஆகலை தோட்டத்தைச் சேர்ந்த நிலு என்றழைக்கப்படும் செல்வராஜ் சபியா என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தெல்தெனிய ஆடைத்தொழிற்சாலையில் வேலையை முடித்து விட்டு முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, முச்சக்கர வண்டி வீதியை விட்டு சுமார் 35 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் முச்சக்கர வண்டியில் பயணித்த இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மடுல்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்த நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

35 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி; 21 வயது யுவதி சாவு. மூவர் வைத்தியசாலையில் கண்டி - பன்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுகங்கை அரத்தன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதான யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.பன்வில, தவலந்தன்ன - ஆகலை தோட்டத்தைச் சேர்ந்த நிலு என்றழைக்கப்படும் செல்வராஜ் சபியா என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.தெல்தெனிய ஆடைத்தொழிற்சாலையில் வேலையை முடித்து விட்டு முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, முச்சக்கர வண்டி வீதியை விட்டு சுமார் 35 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மேலும் முச்சக்கர வண்டியில் பயணித்த இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மடுல்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்த நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிரேதப் பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now