• May 20 2024

இராணுவ பஸ் மோதி மூன்று வயது சிறுமி பரிதாபமாக பலி..! samugammedia

Chithra / Jun 22nd 2023, 12:02 pm
image

Advertisement

பண்டாரகம பகுதியில் இன்று காலை இரணுவத்தினர் பயணித்த பஸ்ஸில் ஸ்கூட்டர் ஒன்று மோதியதில் ஸ்கூட்டரில் பயணித்த 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரைகம கலகட வீதி பகுதியைச் சேர்ந்த இசதி தெனெத்மா சபுகே என்ற மூன்று வயது சிறுமியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம கூட்டுறவுச் சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் கணக்காளரான உயிரிழந்த சிறுமியின் தாயார், சிறுமியுடன் ஸ்கூட்டரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பண்டாரகம கூட்டுறவுச் சங்க அலுவலகத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுத்துறையில் இருந்து இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் பண்டாரகமவில் இருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுமியையும் அவரது தாயையும் உடனடியாகச் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்தார்.


இராணுவ பஸ் மோதி மூன்று வயது சிறுமி பரிதாபமாக பலி. samugammedia பண்டாரகம பகுதியில் இன்று காலை இரணுவத்தினர் பயணித்த பஸ்ஸில் ஸ்கூட்டர் ஒன்று மோதியதில் ஸ்கூட்டரில் பயணித்த 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ரைகம கலகட வீதி பகுதியைச் சேர்ந்த இசதி தெனெத்மா சபுகே என்ற மூன்று வயது சிறுமியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.பண்டாரகம கூட்டுறவுச் சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் கணக்காளரான உயிரிழந்த சிறுமியின் தாயார், சிறுமியுடன் ஸ்கூட்டரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பண்டாரகம கூட்டுறவுச் சங்க அலுவலகத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.களுத்துறையில் இருந்து இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் பண்டாரகமவில் இருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.விபத்தில் படுகாயமடைந்த சிறுமியையும் அவரது தாயையும் உடனடியாகச் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement