• Nov 28 2024

இலங்கையின் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணிகளுக்கு தயாராகும் டிக்டொக்

Chithra / Sep 12th 2024, 2:36 pm
image

  

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க டிக்டொக் நிறுவனம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில், தேர்தல் தொடர்பில் பகிரப்படும் உள்ளடக்கங்களை சரிபார்க்க IFCN-அங்கீகாரம் பெற்ற நியூஸ்செக்கர் தகவல் சரிப்பார்த்தல் அமைப்புடன் டிக்டொக் கைக்கோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின் அடிப்படையில், டிக்டொக் இலங்கை தேர்தல் மையத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தேர்தல் மையம் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தனது சேவைவை வழங்குகிறது.

பயனர்களுக்கு தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை வழங்குகிறது. இவற்றிலுள்ள அறிக்கையிடல் கருவிகள் பயனர்களை தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்தை அடிகோடிட்டு காட்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிக்டொக்கின் உண்மை சரிப்பார்த்தல் வழிகாட்டுதல்களை மீறும் தகவல்களை அகற்றுதல், பகிரப்படுவதை கட்டுப்படுத்தல் மற்றும் நம்பகமான ஆதாரங்களுக்கு தேடல்களுக்கு வழிகாட்டல் ஆகியவற்றை செயற்படுத்தும்.

இதற்கமைய வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான தேர்தல் முறையை பேணுவதற்கு பாதுகாப்பான அமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இந்த தளம் தொடர்ந்து செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணிகளுக்கு தயாராகும் டிக்டொக்   எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க டிக்டொக் நிறுவனம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அந்தவகையில், தேர்தல் தொடர்பில் பகிரப்படும் உள்ளடக்கங்களை சரிபார்க்க IFCN-அங்கீகாரம் பெற்ற நியூஸ்செக்கர் தகவல் சரிப்பார்த்தல் அமைப்புடன் டிக்டொக் கைக்கோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த திட்டத்தின் அடிப்படையில், டிக்டொக் இலங்கை தேர்தல் மையத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த தேர்தல் மையம் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தனது சேவைவை வழங்குகிறது.பயனர்களுக்கு தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை வழங்குகிறது. இவற்றிலுள்ள அறிக்கையிடல் கருவிகள் பயனர்களை தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்தை அடிகோடிட்டு காட்டும் என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், டிக்டொக்கின் உண்மை சரிப்பார்த்தல் வழிகாட்டுதல்களை மீறும் தகவல்களை அகற்றுதல், பகிரப்படுவதை கட்டுப்படுத்தல் மற்றும் நம்பகமான ஆதாரங்களுக்கு தேடல்களுக்கு வழிகாட்டல் ஆகியவற்றை செயற்படுத்தும்.இதற்கமைய வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான தேர்தல் முறையை பேணுவதற்கு பாதுகாப்பான அமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இந்த தளம் தொடர்ந்து செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement