• Dec 26 2024

கட்சி உறுப்பினர்களுக்கு டில்வின் சில்வா விதித்த தடை! பகிரங்கப்படுத்திய சஜித் தரப்பு

Chithra / Dec 25th 2024, 9:04 am
image

 

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தனது அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க கட்சி உறுப்பினர்களுக்கு தடை விதித்துள்ளதாக  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், 

நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவை “கலாநிதி” என அடையாளப்படுத்திய நாடாளுமன்ற இணையத்தளத்தில் உள்ள பிழையான தகவல்கள், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவின் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் அரசாங்கத்தின் கூற்றுக்கள் நாடாளுமன்ற அதிகாரிகளை மையப்படுத்திய சதித்திட்டத்தை முன்வைத்துள்ளது.

இதை அவர்கள் நாடாளுமன்ற அதிகாரிகளின் சதி என்று சித்தரிக்க முயன்றனர்.

ஆனால் அந்த ஆவணம் அவைத் தலைவர் அலுவலகத்தில் இருந்து வந்தது என்பது இப்போது தெளிவாகிறது.

இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பிலான விடயத்தை தெளிவுபடுத்துமாறு அமைச்சர் நாணயக்காரவை அழைத்திருந்தேன்.

நீதியமைச்சர் தனது கோரிக்கைகளை நிராகரித்துள்ளார். அவருக்கு கருத்து தெரிவிக்க கட்சியின் அனுமதி தேவை.

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தனது அனுமதியின்றி ஊடகங்கள் முன் தோன்ற கட்சி உறுப்பினர்களுக்கு தடை விதித்துள்ளார். என்றார்.

கட்சி உறுப்பினர்களுக்கு டில்வின் சில்வா விதித்த தடை பகிரங்கப்படுத்திய சஜித் தரப்பு  ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தனது அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க கட்சி உறுப்பினர்களுக்கு தடை விதித்துள்ளதாக  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  நளின் பண்டார தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவை “கலாநிதி” என அடையாளப்படுத்திய நாடாளுமன்ற இணையத்தளத்தில் உள்ள பிழையான தகவல்கள், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவின் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.எனினும் அரசாங்கத்தின் கூற்றுக்கள் நாடாளுமன்ற அதிகாரிகளை மையப்படுத்திய சதித்திட்டத்தை முன்வைத்துள்ளது.இதை அவர்கள் நாடாளுமன்ற அதிகாரிகளின் சதி என்று சித்தரிக்க முயன்றனர்.ஆனால் அந்த ஆவணம் அவைத் தலைவர் அலுவலகத்தில் இருந்து வந்தது என்பது இப்போது தெளிவாகிறது.இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பிலான விடயத்தை தெளிவுபடுத்துமாறு அமைச்சர் நாணயக்காரவை அழைத்திருந்தேன்.நீதியமைச்சர் தனது கோரிக்கைகளை நிராகரித்துள்ளார். அவருக்கு கருத்து தெரிவிக்க கட்சியின் அனுமதி தேவை.ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தனது அனுமதியின்றி ஊடகங்கள் முன் தோன்ற கட்சி உறுப்பினர்களுக்கு தடை விதித்துள்ளார். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement