• Jul 07 2024

மரக்கடத்தலில் ஈடுபட்ட ஹயஸ், உயர்தர மாணவன் மீது மோதி விபத்து - முல்லைத்தீவில் சம்பவம்

Chithra / Jul 4th 2024, 2:58 pm
image

Advertisement

 

சூட்சுமமான முறையில் ஹயஸ் ரக வாகனத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்ட போது வாகனம் விபத்திற்குள்ளாகிய சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தேக்கமரக்குற்றிகளை கடத்தி வேகமாக சென்ற ஹயஸ் வாகனம் ஒன்று புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில் நேற்றுமுன்தினம் (02) மாலை நேர வகுப்பு முடிந்து வீதியால் சைக்கிளில் பயணித்த உயர்தர மாணவன் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது

இதன்போது ஹயஸ்ரக வாகனத்தில் சட்ட விரோதமான முறையில் மரங்கள் ஏற்றி செல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வாகனத்திற்குள் தேக்க மரக்குற்றிகள் 9 காணப்பட்டுள்ளன.

இது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தி செல்லப்பட்ட மரக்குற்றிகள் என பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாகன விபத்தில் படுகாயமடைந்த உடையார் கட்டு தெற்கு பகுதியினை சேர்ந்த 17 அகவையுடைய மாணவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தினை சேர்ந்த ஹயஸ் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு நேற்று (03) புதுக்குடியிருப்பு பொலிசாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் 16.07.2024 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.


மரக்கடத்தலில் ஈடுபட்ட ஹயஸ், உயர்தர மாணவன் மீது மோதி விபத்து - முல்லைத்தீவில் சம்பவம்  சூட்சுமமான முறையில் ஹயஸ் ரக வாகனத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்ட போது வாகனம் விபத்திற்குள்ளாகிய சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தேக்கமரக்குற்றிகளை கடத்தி வேகமாக சென்ற ஹயஸ் வாகனம் ஒன்று புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில் நேற்றுமுன்தினம் (02) மாலை நேர வகுப்பு முடிந்து வீதியால் சைக்கிளில் பயணித்த உயர்தர மாணவன் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளதுஇதன்போது ஹயஸ்ரக வாகனத்தில் சட்ட விரோதமான முறையில் மரங்கள் ஏற்றி செல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.வாகனத்திற்குள் தேக்க மரக்குற்றிகள் 9 காணப்பட்டுள்ளன.இது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தி செல்லப்பட்ட மரக்குற்றிகள் என பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.வாகன விபத்தில் படுகாயமடைந்த உடையார் கட்டு தெற்கு பகுதியினை சேர்ந்த 17 அகவையுடைய மாணவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.குறித்த சம்பவத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தினை சேர்ந்த ஹயஸ் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு நேற்று (03) புதுக்குடியிருப்பு பொலிசாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் 16.07.2024 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement