• Jul 07 2024

நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்த அரசியல் தலைமைகள்; இன்று நானும் ஜனாதிபதி என கூவுகின்றனர்..! வியாழேந்திரன் சாடல்

Chithra / Jul 4th 2024, 3:03 pm
image

Advertisement

  

கடந்த காலத்தில் இந்த நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் இன்று ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சாடியுள்ளார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுக்கு சொந்தமான காணியில் குடியிருந்து இதுவரையில் காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாவது நடமாடும் சேவை இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

இந்த நாடு பற்றி எரிந்தபோது எங்களுக்கு இரண்டு பிரச்சினைகள் அடுத்ததடுத்து ஏழுந்தது. ஒன்று கோவிட் தொற்று. அதனை தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சி. நாடு வீழ்ச்சி ஏற்பட்டபோது வரிசை நிலையொன்று ஏற்பட்டது.

இதன் காரணமாக மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. அவ்வாறான நிலையிருந்திருந்தால் இந்த நிகழ்வு நடைபெற்றிருக்காது

அன்று அதனை வைத்து பலர் அரசியல் செய்தனர். அதே நிலைமை இன்று இருந்திருந்தால் நீங்கள்  இங்கு வந்திருக்கமாட்டீர்கள்.

ஒரு பிரச்சினை வரும்போது நாங்கள் மக்களை விட்டுவிட்டு ஓடிவிடமுடியாது. அவ்வாறு ஓடுவோமானால் நாங்கள் மக்கள் தலைவர்களாக இருக்கமுயடியாது.

யுத்த காலத்தில் மக்கள் தலைவர்கள் அவ்வாறுதான் செயற்பட்டார்கள். நாட்டினை விட்டு ஓடினார்கள்.நாட்டில் அரசாங்கம் என்ற தரப்பில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அயராத முயற்சி பல அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்று ஒரு குறுகிய காலத்திற்குள் நாடு படிப்படியாக வளர்ச்சிகண்டுவருகின்றது என்றார்.



நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்த அரசியல் தலைமைகள்; இன்று நானும் ஜனாதிபதி என கூவுகின்றனர். வியாழேந்திரன் சாடல்   கடந்த காலத்தில் இந்த நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் இன்று ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சாடியுள்ளார்.காணி சீர்திருத்த ஆணைக்குழுக்கு சொந்தமான காணியில் குடியிருந்து இதுவரையில் காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாவது நடமாடும் சேவை இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,இந்த நாடு பற்றி எரிந்தபோது எங்களுக்கு இரண்டு பிரச்சினைகள் அடுத்ததடுத்து ஏழுந்தது. ஒன்று கோவிட் தொற்று. அதனை தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சி. நாடு வீழ்ச்சி ஏற்பட்டபோது வரிசை நிலையொன்று ஏற்பட்டது.இதன் காரணமாக மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. அவ்வாறான நிலையிருந்திருந்தால் இந்த நிகழ்வு நடைபெற்றிருக்காதுஅன்று அதனை வைத்து பலர் அரசியல் செய்தனர். அதே நிலைமை இன்று இருந்திருந்தால் நீங்கள்  இங்கு வந்திருக்கமாட்டீர்கள்.ஒரு பிரச்சினை வரும்போது நாங்கள் மக்களை விட்டுவிட்டு ஓடிவிடமுடியாது. அவ்வாறு ஓடுவோமானால் நாங்கள் மக்கள் தலைவர்களாக இருக்கமுயடியாது.யுத்த காலத்தில் மக்கள் தலைவர்கள் அவ்வாறுதான் செயற்பட்டார்கள். நாட்டினை விட்டு ஓடினார்கள்.நாட்டில் அரசாங்கம் என்ற தரப்பில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அயராத முயற்சி பல அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்று ஒரு குறுகிய காலத்திற்குள் நாடு படிப்படியாக வளர்ச்சிகண்டுவருகின்றது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement