• Apr 29 2025

திமுத்தின் இறுதிப் போட்டி - மலிங்கவின் உருக்கமான வேண்டுகோள்!

Tharmini / Feb 5th 2025, 3:51 pm
image

இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு நாளை (06) இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு தயாராகவுள்ள திமுத் கருணாரத்னவுக்கு, மரியாதை செலுத்தும் விதமாக அனைத்து இரசிகர்களையும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் திரளுமாறு இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரம் லசித் மலிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட இதயப்பூர்வமான காணொளியில் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்க இந்த வேண்டுகேளை விடுத்துள்ளார்.

நாளை (06) ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கையின் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் போது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிரப்பி திமுத் கருணாரத்னவுக்கு பொருத்தமான பிரியாவிடை வழங்குமாறு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மலிங்கா அந்த காணொளியில் அழைப்பு விடுத்துள்ளார்.

36 வயதான கருணாரத்ன, 2012 ஆம் ஆண்டு காலியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை செய்து, நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை எடுத்தார்.

அன்றிலிருந்து இடது கை தொடக்க ஆட்டக்காரர் 99 டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்கள் உட்பட 7,172 ஓட்டங்களை குவித்துள்ளார். முன்னாள் டெஸ்ட் அணித் தலைவர் இலங்கை கிரிக்கெட்டின் தூண்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

திமுத்தின் இறுதிப் போட்டி - மலிங்கவின் உருக்கமான வேண்டுகோள் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு நாளை (06) இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு தயாராகவுள்ள திமுத் கருணாரத்னவுக்கு, மரியாதை செலுத்தும் விதமாக அனைத்து இரசிகர்களையும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் திரளுமாறு இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரம் லசித் மலிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட இதயப்பூர்வமான காணொளியில் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்க இந்த வேண்டுகேளை விடுத்துள்ளார்.நாளை (06) ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கையின் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் போது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிரப்பி திமுத் கருணாரத்னவுக்கு பொருத்தமான பிரியாவிடை வழங்குமாறு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மலிங்கா அந்த காணொளியில் அழைப்பு விடுத்துள்ளார்.36 வயதான கருணாரத்ன, 2012 ஆம் ஆண்டு காலியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை செய்து, நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை எடுத்தார்.அன்றிலிருந்து இடது கை தொடக்க ஆட்டக்காரர் 99 டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்கள் உட்பட 7,172 ஓட்டங்களை குவித்துள்ளார். முன்னாள் டெஸ்ட் அணித் தலைவர் இலங்கை கிரிக்கெட்டின் தூண்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now