திருகோணமலை – திரியாய் பகுதியில் அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டு 39ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று (09) திரியாய் வரத விக்னேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
1985ஆம் ஆண்டு ஆவணி மாதம் 10 ஆம் திகதி திரியாய் அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் 12 பேரை மக்களின் போக்குவரத்திற்காக ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் ஏற்றிச் சென்று கஜுவத்த என்னும் இடத்தில் வைத்து அவர்கள் அணிந்திருந்த மேற்சட்டையை கழட்டி அவர்களது கைகளை கட்டி ஓடவிட்டு சுட்டு படுகொலை செய்திருந்தார்கள்.
அத்துடன் 1985 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்முறை உச்ச கட்டம் அடைந்திருந்த நிலையில் ஆடி மாதம் 5ஆம் திகதி திரியாய் கிராமத்திற்குள் புகுந்த ஆயுததாரிகளும், சிவில் உடை தரித்த காடையர்களும் திரியாய் கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தையும் தீக்கிரையாக்கியதுடன் சொத்துக்களையும் தீக்கிரையாக்கி அழித்தார்கள். இந்நிலையில் திரியாய் கிராம மக்கள் பலர் கிராமத்தை விட்டு வெளியேறியதுடன் ஏனையோர் திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தார்கள். இவர்கள் மீதே இவ் வன்முறை சம்பவம் இடம்பெற்றிருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருமலை - திரியாய் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு திருகோணமலை – திரியாய் பகுதியில் அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டு 39ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று (09) திரியாய் வரத விக்னேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.1985ஆம் ஆண்டு ஆவணி மாதம் 10 ஆம் திகதி திரியாய் அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் 12 பேரை மக்களின் போக்குவரத்திற்காக ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் ஏற்றிச் சென்று கஜுவத்த என்னும் இடத்தில் வைத்து அவர்கள் அணிந்திருந்த மேற்சட்டையை கழட்டி அவர்களது கைகளை கட்டி ஓடவிட்டு சுட்டு படுகொலை செய்திருந்தார்கள்.அத்துடன் 1985 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்முறை உச்ச கட்டம் அடைந்திருந்த நிலையில் ஆடி மாதம் 5ஆம் திகதி திரியாய் கிராமத்திற்குள் புகுந்த ஆயுததாரிகளும், சிவில் உடை தரித்த காடையர்களும் திரியாய் கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தையும் தீக்கிரையாக்கியதுடன் சொத்துக்களையும் தீக்கிரையாக்கி அழித்தார்கள். இந்நிலையில் திரியாய் கிராம மக்கள் பலர் கிராமத்தை விட்டு வெளியேறியதுடன் ஏனையோர் திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தார்கள். இவர்கள் மீதே இவ் வன்முறை சம்பவம் இடம்பெற்றிருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.