• Sep 17 2024

திருமலை நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகாரம்...! 10 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை...!

Sharmi / Jun 13th 2024, 11:42 am
image

Advertisement

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு,  சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு கடந்த சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டன.

ஆனால், எனினும் கடந்த செவ்வாய் கிழமை(11) காலை 9.45 மணிக்கு  மீண்டும் பாறை உடைப்பு வேலைகளை ஆரம்பித்த போது மக்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பூர் பொலிசார் 10 பேரை செவ்வாய்க்கிழமை (11) கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

விடுவிக்கப்பட்ட 10 பேரும் மூதூர் நீதிமன்ற நீதிமன்றில் நேற்று  (12) மதியம் ஆஜராகினர்.

இந்நிலையில், நீதிமன்றமானது அனைவரையும் சொந்தப் பிணையில் விடுவித்ததோடு குறித்த பிரதேசத்தை இம் மாதம் 15 ம் திகதியன்று நீதிவான் பார்வையிடுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை சந்தேகநபர்கள் 10 பேருக்கும் சார்பாக சட்டத்தரணிகளான பு. முகுந்தன்,  ந. மோகன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் செய்து  மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இந்த மலையை உடைப்பதால் பல்வேறு இன்னல்களை மக்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.  எங்களது வாழ்வாதாரம் இங்கு தான் உள்ளது.  விவசாயச் செய்கை கால் நடை வளர்ப்பு போன்றன இதன் மூலம் பாதிக்கப்படலாம்.  எனவே  அரசாங்கம் இவ் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருமலை நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகாரம். 10 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு,  சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு கடந்த சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டன.ஆனால், எனினும் கடந்த செவ்வாய் கிழமை(11) காலை 9.45 மணிக்கு  மீண்டும் பாறை உடைப்பு வேலைகளை ஆரம்பித்த போது மக்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், சம்பூர் பொலிசார் 10 பேரை செவ்வாய்க்கிழமை (11) கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.விடுவிக்கப்பட்ட 10 பேரும் மூதூர் நீதிமன்ற நீதிமன்றில் நேற்று  (12) மதியம் ஆஜராகினர்.இந்நிலையில், நீதிமன்றமானது அனைவரையும் சொந்தப் பிணையில் விடுவித்ததோடு குறித்த பிரதேசத்தை இம் மாதம் 15 ம் திகதியன்று நீதிவான் பார்வையிடுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.இதேவேளை சந்தேகநபர்கள் 10 பேருக்கும் சார்பாக சட்டத்தரணிகளான பு. முகுந்தன்,  ந. மோகன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் செய்து  மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.இந்த மலையை உடைப்பதால் பல்வேறு இன்னல்களை மக்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.  எங்களது வாழ்வாதாரம் இங்கு தான் உள்ளது.  விவசாயச் செய்கை கால் நடை வளர்ப்பு போன்றன இதன் மூலம் பாதிக்கப்படலாம்.  எனவே  அரசாங்கம் இவ் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement