• Apr 30 2024

கொழும்பில் ஒன்றுகூடும் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் - இன்று முக்கிய தீர்மானங்கள்!

Chithra / Jan 10th 2023, 8:08 am
image

Advertisement

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி முன்னதாக கூடி ஆராய்ந்திருந்தது.

இதன்போது எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஏனைய பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை தமிழரசு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஏனைய தரப்பினர் ஒன்றாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இது குறித்த இறுதி தீர்மானம் இன்றைய தினம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், டொலோ என்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் ஒன்றுகூடும் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் - இன்று முக்கிய தீர்மானங்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி முன்னதாக கூடி ஆராய்ந்திருந்தது.இதன்போது எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஏனைய பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேநேரம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை தமிழரசு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் ஏனைய தரப்பினர் ஒன்றாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும் இது குறித்த இறுதி தீர்மானம் இன்றைய தினம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், டொலோ என்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தில் உள்ள சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement