• May 21 2024

பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து விசேட அவதானம்

Tharun / Apr 29th 2024, 7:41 pm
image

Advertisement

பதுளை மாவட்டத்தின் கரந்தகொல்ல பிரதேசத்தில் எல்ல வெல்லவாய வீதிக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து விசேட அவதானம் செலுத்தியதுடன், மேலும் குறித்த சம்பவ இடத்தை மீண்டும் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உத்தரவிட்டார்.

மேலும், எதிர்காலத்தில் குறித்த பகுதியில் ஏற்படும் மண்சரிவு அபாயங்களை தடுப்பதற்கான தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை இராஜாங்க அமைச்சர் வழங்கினார்.

மேலும், இராஜாங்க அமைச்சரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் விஞ்ஞானிகள் அடங்கிய நிபுணர் குழு மே மாதம் 01ஆம் திகதி குறித்த நிலப்பகுதி குறித்து கள ஆய்வு செய்து தேவையான பரிந்துரைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து விசேட அவதானம் பதுளை மாவட்டத்தின் கரந்தகொல்ல பிரதேசத்தில் எல்ல வெல்லவாய வீதிக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து விசேட அவதானம் செலுத்தியதுடன், மேலும் குறித்த சம்பவ இடத்தை மீண்டும் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உத்தரவிட்டார்.மேலும், எதிர்காலத்தில் குறித்த பகுதியில் ஏற்படும் மண்சரிவு அபாயங்களை தடுப்பதற்கான தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை இராஜாங்க அமைச்சர் வழங்கினார்.மேலும், இராஜாங்க அமைச்சரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் விஞ்ஞானிகள் அடங்கிய நிபுணர் குழு மே மாதம் 01ஆம் திகதி குறித்த நிலப்பகுதி குறித்து கள ஆய்வு செய்து தேவையான பரிந்துரைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement