• Nov 21 2024

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள : ஐந்து ஆண்டு திட்டம் அங்குரார்ப்பணம்

Tharmini / Nov 21st 2024, 1:42 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைப்பாடுகள் உட்பட அனைத்து விடயங்களும் அடங்கிய ஐந்து ஆண்டு திட்டம் இன்று (21) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

2024-2029வரையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டம் தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையின் கீழ் யுஎன்டிபி.யினி; நிதியுதவுதவியுடன் இந்த ஐந்து வருட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐந்து திட்டங்களை உள்ளடக்கியதாக இந்த ஐந்துவருட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயம்,கால்நடை,மீன்பிடி உட்பட உற்பத்தி துறை சார்ந்த திட்டங்கள் உள்ளடக்கியதாகவும் நீர்பாசனம்,வீதி புனரமைப்பு உட்பட பல விடயங்களை உள்ளடக்கியதாக உட்கட்டுமான திட்டங்கள,சேவைதுறைகள் உட்பட 

பல்வேறு துறைகளின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக பல்வேறு விடயங்கள் இந்த ஐந்தாண்டு திட்ட நூலில் உள்வாங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் வளங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அதற்கான முதலீடுகளைப்பெற்று தொழில்துறைகளை முன்னேற்ற நிலைக்கு கொண்டுசென்று ஏற்றுமதி துறையினை அதிகரித்தல் மற்றும் வேலைவாய்ப்புத்துறையினை அதிகரித்தல் உட்பட பல்வேறு திட்டங்கள் இதன்மூலம் முன்மொழியப்பட்டுள்ளன.

இதனை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த்,மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன்,

மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் நவநீதன்,யுஎன்டிபி. மாவட்ட திட்ட பணிப்பாளர் பார்த்தீபன் மற்றும் பிரதேச செயலாளர்கள்,

திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து துறைகளும் ஆய்வுசெய்யப்பட்டு இந்த திட்டம் இலங்கையின் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களை அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தல்,வெளிநாட்டு முதலீடுகளைப்பெற்றுக்கொள்ளல் ஊடாக,

செயற்படுத்துவதற்கும் அதனை ஆறு மாதகாலத்திற்கு ஓருமுறை ஆய்வுசெய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டம் அனைத்து வளங்களையும் கொண்டமாவட்டமாகவுள்ள நிலையில் இறக்குமதிகளை குறைத்து ஏற்றுமதிகளை செய்வதற்கான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக,

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் இதன்போது தெரிவித்தார்.




மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள : ஐந்து ஆண்டு திட்டம் அங்குரார்ப்பணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள்,மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைப்பாடுகள் உட்பட அனைத்து விடயங்களும் அடங்கிய ஐந்து ஆண்டு திட்டம் இன்று (21) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.2024-2029வரையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டம் தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையின் கீழ் யுஎன்டிபி.யினி; நிதியுதவுதவியுடன் இந்த ஐந்து வருட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.ஐந்து திட்டங்களை உள்ளடக்கியதாக இந்த ஐந்துவருட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.விவசாயம்,கால்நடை,மீன்பிடி உட்பட உற்பத்தி துறை சார்ந்த திட்டங்கள் உள்ளடக்கியதாகவும் நீர்பாசனம்,வீதி புனரமைப்பு உட்பட பல விடயங்களை உள்ளடக்கியதாக உட்கட்டுமான திட்டங்கள,சேவைதுறைகள் உட்பட பல்வேறு துறைகளின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக பல்வேறு விடயங்கள் இந்த ஐந்தாண்டு திட்ட நூலில் உள்வாங்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் வளங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அதற்கான முதலீடுகளைப்பெற்று தொழில்துறைகளை முன்னேற்ற நிலைக்கு கொண்டுசென்று ஏற்றுமதி துறையினை அதிகரித்தல் மற்றும் வேலைவாய்ப்புத்துறையினை அதிகரித்தல் உட்பட பல்வேறு திட்டங்கள் இதன்மூலம் முன்மொழியப்பட்டுள்ளன.இதனை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த்,மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் நவநீதன்,யுஎன்டிபி. மாவட்ட திட்ட பணிப்பாளர் பார்த்தீபன் மற்றும் பிரதேச செயலாளர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து துறைகளும் ஆய்வுசெய்யப்பட்டு இந்த திட்டம் இலங்கையின் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ளது.இந்த திட்டங்களை அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தல்,வெளிநாட்டு முதலீடுகளைப்பெற்றுக்கொள்ளல் ஊடாக,செயற்படுத்துவதற்கும் அதனை ஆறு மாதகாலத்திற்கு ஓருமுறை ஆய்வுசெய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டம் அனைத்து வளங்களையும் கொண்டமாவட்டமாகவுள்ள நிலையில் இறக்குமதிகளை குறைத்து ஏற்றுமதிகளை செய்வதற்கான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் இதன்போது தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement