• Jan 30 2025

நாடாளுமன்றில் முதல்நாளே சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் அர்ச்சுனா! ஆசனத்திற்கும் சண்டை

Chithra / Nov 21st 2024, 2:30 pm
image

 

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்  புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு இன்றையதினம்(21) ஆரம்பமானபோது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்ததுடன் அந்த கதிரையிலிருந்து நகர மறுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றுக்கான கன்னி அமர்வு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அரச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

உடனடியாகவே நாடாளுமன்ற ஊழியர்கள் இது எதிர்க்கிட்சித் தலைவரின் ஆசனம் எனவே அந்த இடத்திலிருந்து நகருமாறு தெரிவித்தபோதும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றின் முதல்நாள் அமர்வில் ஆசனங்கள் எவருக்கும் ஒதுக்கப்படவில்லை என வைத்தியர் அர்ச்சுனா நாடாளுன்ற ஊழியருக்கு பதிலளித்தார்.

புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். ஆனால், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது, சம்பிரதாயம் உள்ளது என்று பணியாளர் கூற,

சம்பிரதாயத்தை மாற்றவே இங்கு வந்துள்ளோம் என அர்ஜுனா இராமநாதன் பதிலளித்தார். 

நாடாளுமன்றில் முதல்நாளே சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் அர்ச்சுனா ஆசனத்திற்கும் சண்டை  யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்  புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு இன்றையதினம்(21) ஆரம்பமானபோது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்ததுடன் அந்த கதிரையிலிருந்து நகர மறுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றுக்கான கன்னி அமர்வு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.இதன்போது முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அரச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.உடனடியாகவே நாடாளுமன்ற ஊழியர்கள் இது எதிர்க்கிட்சித் தலைவரின் ஆசனம் எனவே அந்த இடத்திலிருந்து நகருமாறு தெரிவித்தபோதும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றின் முதல்நாள் அமர்வில் ஆசனங்கள் எவருக்கும் ஒதுக்கப்படவில்லை என வைத்தியர் அர்ச்சுனா நாடாளுன்ற ஊழியருக்கு பதிலளித்தார்.புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். ஆனால், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது, சம்பிரதாயம் உள்ளது என்று பணியாளர் கூற,சம்பிரதாயத்தை மாற்றவே இங்கு வந்துள்ளோம் என அர்ஜுனா இராமநாதன் பதிலளித்தார். 

Advertisement

Advertisement

Advertisement