• May 20 2024

இன்று பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா ! samugammedia

Tamil nila / May 6th 2023, 7:12 am
image

Advertisement

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா இன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இடம்பெறவுள்ளது.

இவ்விழாவில் மனைவி கமீலாவுடன் பங்கேற்கும் மன்னருக்கு முடிசூட்டப்படும். இந்த விழாவிற்கு 'Operation Golden Orb' என பெயரிடப்பட்டுள்ளது.

முடிசூட்டு விழா சரியாக 11:00 மணிக்கு (பிரித்தானிய நேரம்) ஆரம்பிக்கவுள்ளது. அதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாகவே மன்னர் சார்ல்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னரின் தலையில் கிரீடம் சூட்டப்படும் ஒரு மதம் சார்ந்த வழக்கமான நிகழ்ச்சியே முடிசூட்டுதல் எனப்படுகிறது.

அது இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என்ற அங்கீகாரத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதுடன், இந்த உரிமை மற்றும் அதிகாரங்களை அரசருக்கு மாற்றும் நிகழ்ச்சியாகவும் இருக்கும்.

இருப்பினும், மன்னர் பதவியில் இருப்பதற்கு கண்டிப்பாக கிரீடம் சூட்டப்பட வேண்டும் என எந்தத் தேவையும் இல்லை.

அரசி எலிசபெத் காலமான மூன்றாம் நாள் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னராக சார்ல்ஸ் பிரகடனப்படுத்தப்பட்டார்.   

மன்னர் எட்டாம் எட்வர்ட் முடிசூட்டிக்கொள்ளாமலேயே ஆட்சி செய்தார்.

சார்ல்ஸைப் பொறுத்தளவில், அரசி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்த அடுத்த வினாடியில் இயல்பாகவே அவர் மன்னராகிவிட்டார்.

இதற்கிடையே இந்த முடிசூட்டு விழாவை முன்னிட்டு 8ஆம் திகதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிசூட்டு விழாவை மக்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாகவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரிஷி சூனக் தெரிவித்துள்ளார்.




இன்று பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா samugammedia பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா இன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இடம்பெறவுள்ளது.இவ்விழாவில் மனைவி கமீலாவுடன் பங்கேற்கும் மன்னருக்கு முடிசூட்டப்படும். இந்த விழாவிற்கு 'Operation Golden Orb' என பெயரிடப்பட்டுள்ளது.முடிசூட்டு விழா சரியாக 11:00 மணிக்கு (பிரித்தானிய நேரம்) ஆரம்பிக்கவுள்ளது. அதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாகவே மன்னர் சார்ல்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மன்னரின் தலையில் கிரீடம் சூட்டப்படும் ஒரு மதம் சார்ந்த வழக்கமான நிகழ்ச்சியே முடிசூட்டுதல் எனப்படுகிறது.அது இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என்ற அங்கீகாரத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதுடன், இந்த உரிமை மற்றும் அதிகாரங்களை அரசருக்கு மாற்றும் நிகழ்ச்சியாகவும் இருக்கும்.இருப்பினும், மன்னர் பதவியில் இருப்பதற்கு கண்டிப்பாக கிரீடம் சூட்டப்பட வேண்டும் என எந்தத் தேவையும் இல்லை.அரசி எலிசபெத் காலமான மூன்றாம் நாள் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னராக சார்ல்ஸ் பிரகடனப்படுத்தப்பட்டார்.   மன்னர் எட்டாம் எட்வர்ட் முடிசூட்டிக்கொள்ளாமலேயே ஆட்சி செய்தார்.சார்ல்ஸைப் பொறுத்தளவில், அரசி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்த அடுத்த வினாடியில் இயல்பாகவே அவர் மன்னராகிவிட்டார்.இதற்கிடையே இந்த முடிசூட்டு விழாவை முன்னிட்டு 8ஆம் திகதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.முடிசூட்டு விழாவை மக்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாகவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரிஷி சூனக் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement