ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் மூன்றாவது நாளாக இன்றும்(6) முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தபால் மூல வாக்களிப்பில் பங்கேற்க உரிய அரச ஊழியர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்றும், இன்றும் முப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று வாக்களிக்க முடியாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இன்றும் தபால் மூலமும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .
தபால்மூல வாக்காளர்கள் உரிய திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தாங்கள் பணியாற்றும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் வாக்களிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்குகளிப்புக்கான மூன்றாம் நாள் இன்று. ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் மூன்றாவது நாளாக இன்றும்(6) முன்னெடுக்கப்படவுள்ளது.இதன்படி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தபால் மூல வாக்களிப்பில் பங்கேற்க உரிய அரச ஊழியர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.நேற்றும், இன்றும் முப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று வாக்களிக்க முடியாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இன்றும் தபால் மூலமும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .தபால்மூல வாக்காளர்கள் உரிய திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தாங்கள் பணியாற்றும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் வாக்களிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.