• Apr 28 2025

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால்மூல வாக்குப் பதிவுக்கான மூன்றாம் நாள் இன்று!

Chithra / Apr 28th 2025, 8:14 am
image

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது.  

அதன்படி, கடந்த 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்குகளை பதிவு செய்ய முடியாத தகுதிவாய்ந்த அரச அதிகாரிகளுக்கு இன்று (28) மற்றும் நாளை (29) அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும், தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

அதன்படி, மார்ச் 20 ஆம் திகதி முதல் பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,053 ஆகும்.

மொத்தம் பெறப்பட்ட 3,053 முறைப்பாடுகளில் 2,491 முறைப்பாடுகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால்மூல வாக்குப் பதிவுக்கான மூன்றாம் நாள் இன்று  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது.  அதன்படி, கடந்த 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்குகளை பதிவு செய்ய முடியாத தகுதிவாய்ந்த அரச அதிகாரிகளுக்கு இன்று (28) மற்றும் நாளை (29) அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.மேலும், தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையில், உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.அதன்படி, மார்ச் 20 ஆம் திகதி முதல் பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,053 ஆகும்.மொத்தம் பெறப்பட்ட 3,053 முறைப்பாடுகளில் 2,491 முறைப்பாடுகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement