• May 04 2024

இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!samugammedia

mathuri / Mar 8th 2024, 6:39 am
image

Advertisement

இன்றைய தினம் நாட்டின் வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி, மன்னார், அனுராதபுரம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய  மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.  

அத்துடன் , நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வறட்சியான  வானிலை நிலவக்கூடும். 

மேலும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 - 30 கிலோமீற்றர் வேகத்தில் காங்கேசன்துறை  தொடக்கம் திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் கிழக்கு அல்லது வடகிழக்குத் திசையில் இருந்தும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படுவதோடு கடல் பிராந்தியங்களிலும்  சீரான வானிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


 

இன்றைய வானிலை முன்னறிவிப்பு.samugammedia இன்றைய தினம் நாட்டின் வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி, மன்னார், அனுராதபுரம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய  மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.  அத்துடன் , நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வறட்சியான  வானிலை நிலவக்கூடும். மேலும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 - 30 கிலோமீற்றர் வேகத்தில் காங்கேசன்துறை  தொடக்கம் திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் கிழக்கு அல்லது வடகிழக்குத் திசையில் இருந்தும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படுவதோடு கடல் பிராந்தியங்களிலும்  சீரான வானிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement