• Nov 28 2024

நாட்டில் கரட்டைத் தொடர்ந்து தீடீரென எகிறிய தக்காளி விலை..!

Chithra / Jan 29th 2024, 12:38 pm
image

 

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் நாசமடைந்ததால், பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறி பயிர்களே இந்நாட்களில் சந்தைக்கு வருகின்றன.

இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாயாக அதிகரித்துள்ளது.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,350 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய மிளகாய் மொத்த விற்பனை விலை 700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் இன்றைய நாட்களில் ஒரு கிலோ ப்ரோக்கோலியின் மொத்த விலை 4100 ரூபாவாகும்.

வயல்களில் பயிர்கள் அழிந்து வருவதால் பசுமைக்குடில்களில் விளையும் காய்கறிகளின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.

நாட்டில் கரட்டைத் தொடர்ந்து தீடீரென எகிறிய தக்காளி விலை.  நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளது.கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் நாசமடைந்ததால், பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறி பயிர்களே இந்நாட்களில் சந்தைக்கு வருகின்றன.இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாயாக அதிகரித்துள்ளது.நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,350 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய மிளகாய் மொத்த விற்பனை விலை 700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.மேலும் இன்றைய நாட்களில் ஒரு கிலோ ப்ரோக்கோலியின் மொத்த விலை 4100 ரூபாவாகும்.வயல்களில் பயிர்கள் அழிந்து வருவதால் பசுமைக்குடில்களில் விளையும் காய்கறிகளின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement