• Nov 17 2024

சர்வாதிகார ஜனாதிபதி முறை இலங்கைத் தீவின் சாபக்கேடு- சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு..!

Sharmi / Aug 21st 2024, 4:22 pm
image

இலங்கைத் தீவின் வரலாற்றில் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் மூலம் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அதனை பயன்படுத்திய ஜனாதிபதிகளான  ஜெயவர்த்தன தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரை நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய வகையில் கையாளவில்லை  என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இதுவரை நாட்டின் பின்னடைவுக்கான செயற்பாடுகளையும் அதனை மேற்கொண்ட தரப்புக்களை பாதுகாப்பதிலும் நிறைவேற்று அதிகாரம் பெரும் பங்கு வகித்துள்ளது.

தேர்தல் காலங்களில் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட வேண்டும் என்ற கோசம் மேலோங்கி இருந்தாலும் தேர்தல் முடிவடைந்த பின்னர் அவை மறக்கப்பட்டு இருப்பதை விட கூடுதல் அதிகாரங்களை பெற முடியுமா என அதிகாரக் கதிரைக்கு வருபவர்கள் சிந்திக்கின்றார்கள்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு ஆட்சிப் பீடத்தில் இருக்கும் போது தவறை ஒத்துக் கொண்டு பதவி விலகும் அரசியல் கலாசாரம் உருவாகினால் மட்டுமே ஊழலையும் ஊழல் கூட்டத்தையும் ஒழிக்கலாம் மாறாக சர்வ அதிகாரமுறை தொடர்ந்தல் நாடு  ஊழல்வாதிகளின் பாதுகாப்புக் கூடாரமாகவே மாறும் அத்துடன் இனவாதத்தை தணிய விடாது தீயாக எரியவைக்கும்.

நாட்டில் இனவாதம் மேலோங்கி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்த பின்னரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பிற்போக்கு சிந்தனை பேரினவாதிகள் மத்தியில் புரையோடிப் போய் உள்ளது என்றால் நாடு முன்னோக்கி செல்ல வாய்ப்பே இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வாதிகார ஜனாதிபதி முறை இலங்கைத் தீவின் சாபக்கேடு- சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு. இலங்கைத் தீவின் வரலாற்றில் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் மூலம் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அதனை பயன்படுத்திய ஜனாதிபதிகளான  ஜெயவர்த்தன தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரை நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய வகையில் கையாளவில்லை  என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இதுவரை நாட்டின் பின்னடைவுக்கான செயற்பாடுகளையும் அதனை மேற்கொண்ட தரப்புக்களை பாதுகாப்பதிலும் நிறைவேற்று அதிகாரம் பெரும் பங்கு வகித்துள்ளது.தேர்தல் காலங்களில் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட வேண்டும் என்ற கோசம் மேலோங்கி இருந்தாலும் தேர்தல் முடிவடைந்த பின்னர் அவை மறக்கப்பட்டு இருப்பதை விட கூடுதல் அதிகாரங்களை பெற முடியுமா என அதிகாரக் கதிரைக்கு வருபவர்கள் சிந்திக்கின்றார்கள்.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு ஆட்சிப் பீடத்தில் இருக்கும் போது தவறை ஒத்துக் கொண்டு பதவி விலகும் அரசியல் கலாசாரம் உருவாகினால் மட்டுமே ஊழலையும் ஊழல் கூட்டத்தையும் ஒழிக்கலாம் மாறாக சர்வ அதிகாரமுறை தொடர்ந்தல் நாடு  ஊழல்வாதிகளின் பாதுகாப்புக் கூடாரமாகவே மாறும் அத்துடன் இனவாதத்தை தணிய விடாது தீயாக எரியவைக்கும்.நாட்டில் இனவாதம் மேலோங்கி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்த பின்னரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பிற்போக்கு சிந்தனை பேரினவாதிகள் மத்தியில் புரையோடிப் போய் உள்ளது என்றால் நாடு முன்னோக்கி செல்ல வாய்ப்பே இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement