இலங்கை இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இன்று (26) பதிவு செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து ஒரு தம்பதியினர் வந்ததைத் தொடர்ந்து இந்த சாதனை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஜனவரியில் 208 253 சுற்றுலாப்பயணிகளும், பெப்ரவரியில் 218 350 சுற்றுலாப் பயணிகளும், மார்ச்சில் 209 181 சுற்றுலாப் பயணிகளும், ஏப்ரலில் 148 867 சுற்றுலாப்பயணிகளும், மே மாதத்தில் 112 128 சுற்றுலாப்பயணிகளும், ஜூனில் 113 470 சுற்றுலாப் பயணிகளும், ஜூலையில் 187 810 சுற்றுலாப் பயணிகளும், ஆகஸ்டில் 164 609 சுற்றுலாப் பயணிகளும், செப்டெம்பரில் 122 140 சுற்றுலாப் பயணிகளும், ஒக்டோபரில் 135 907 சுற்றுலாப் பயணிகளும், நவம்பரில் 184 158 சுற்றுலாப் பயணிகளும், டிசம்பரில் (22ஆம் திகதி வரை) 161 383 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதன்படி, 399,224 சுற்றுலாப்பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
இதேவேளை ரஷ்யாவிலிருந்து 189 289, பிரித்தானியாவிலிருந்து 172 404, ஜேர்மனிலிருந்து 131 379, சீனாவிலிருந்து 120 268 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மேலும் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, மாலைத்தீவு, போலந்து, கனடா, பங்களாதேஷ், ஸ்பெயின், இதாலி, சுவிஸர்லாந்து, ஜப்பான், இஸ்ரேல் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
நாட்டில் 2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை : 2 மில்லியனை விஞ்சியது இலங்கை இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இன்று (26) பதிவு செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. தாய்லாந்தில் இருந்து ஒரு தம்பதியினர் வந்ததைத் தொடர்ந்து இந்த சாதனை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய ஜனவரியில் 208 253 சுற்றுலாப்பயணிகளும், பெப்ரவரியில் 218 350 சுற்றுலாப் பயணிகளும், மார்ச்சில் 209 181 சுற்றுலாப் பயணிகளும், ஏப்ரலில் 148 867 சுற்றுலாப்பயணிகளும், மே மாதத்தில் 112 128 சுற்றுலாப்பயணிகளும், ஜூனில் 113 470 சுற்றுலாப் பயணிகளும், ஜூலையில் 187 810 சுற்றுலாப் பயணிகளும், ஆகஸ்டில் 164 609 சுற்றுலாப் பயணிகளும், செப்டெம்பரில் 122 140 சுற்றுலாப் பயணிகளும், ஒக்டோபரில் 135 907 சுற்றுலாப் பயணிகளும், நவம்பரில் 184 158 சுற்றுலாப் பயணிகளும், டிசம்பரில் (22ஆம் திகதி வரை) 161 383 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதன்படி, 399,224 சுற்றுலாப்பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.இதேவேளை ரஷ்யாவிலிருந்து 189 289, பிரித்தானியாவிலிருந்து 172 404, ஜேர்மனிலிருந்து 131 379, சீனாவிலிருந்து 120 268 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.மேலும் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, மாலைத்தீவு, போலந்து, கனடா, பங்களாதேஷ், ஸ்பெயின், இதாலி, சுவிஸர்லாந்து, ஜப்பான், இஸ்ரேல் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.