இந்த ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 181,872 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 608,475 ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் மார்ச் 27 வரையிலான காலகட்டத்தில், இந்த நாட்டிற்கு வந்துள்ள இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 92,644 ஆகவும், ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 88,301 ஆகவும் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்.வெளியான அறிவிப்பு. இந்த ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 181,872 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 608,475 ஆக அதிகரித்துள்ளது.இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் மார்ச் 27 வரையிலான காலகட்டத்தில், இந்த நாட்டிற்கு வந்துள்ள இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 92,644 ஆகவும், ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 88,301 ஆகவும் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.