• Aug 05 2025

மனநலம் பாதிக்கப்பட்டவரை கடுமையாக தாக்கிய வர்த்தகர்கள்- மக்கள் விசனம்

Chithra / Aug 4th 2025, 11:58 am
image


சாமிமலை -கவரவலை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை, மூன்று வர்த்தகர்கள்    கடுமையாக  தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இச் சம்பவம் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது. 

இதன்பின்னர் இவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இருந்து கண்டி போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.

கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மீண்டும் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். 

அதன் பின் நேற்று ஹட்டன் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் பதில் நீதிவான்  ஒருவருக்கு தலா 500000 ரூபாய் சரீர பிணையில் மூவரையும் விடுவித்துள்ளார்.  

இன்று வரை பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்  தாக்கிய சந்தேக நபர்கள் வெளியே வந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை தொடங்கி விட்டார்கள். 

இந்நிலையில் தோட்ட தொழிலாளர்கள் என்றுமே பயந்து வாழ வேண்டுமா, தோட்ட தொழிலாளர்களுக்கு என்றுமே நியாயம் இல்லையா, 

தோட்ட தொழிலாளர்களை நம்பி வாழ்வாதார்த்தை கொண்டு செல்லும் முதலாளிமார்கள் எங்களையே தாக்குகின்றார்கள்.

இதற்கொரு நியாயம் இல்லையா? பணம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு  ஒரு சட்டமா என சாமிமலை கவரவலை பகுதியில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். 


மனநலம் பாதிக்கப்பட்டவரை கடுமையாக தாக்கிய வர்த்தகர்கள்- மக்கள் விசனம் சாமிமலை -கவரவலை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை, மூன்று வர்த்தகர்கள்    கடுமையாக  தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்பின்னர் இவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இருந்து கண்டி போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மீண்டும் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.இது தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். அதன் பின் நேற்று ஹட்டன் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் பதில் நீதிவான்  ஒருவருக்கு தலா 500000 ரூபாய் சரீர பிணையில் மூவரையும் விடுவித்துள்ளார்.  இன்று வரை பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்  தாக்கிய சந்தேக நபர்கள் வெளியே வந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் தோட்ட தொழிலாளர்கள் என்றுமே பயந்து வாழ வேண்டுமா, தோட்ட தொழிலாளர்களுக்கு என்றுமே நியாயம் இல்லையா, தோட்ட தொழிலாளர்களை நம்பி வாழ்வாதார்த்தை கொண்டு செல்லும் முதலாளிமார்கள் எங்களையே தாக்குகின்றார்கள்.இதற்கொரு நியாயம் இல்லையா பணம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு  ஒரு சட்டமா என சாமிமலை கவரவலை பகுதியில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement