• Oct 29 2025

வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்!

shanuja / Oct 28th 2025, 11:36 am
image

அரசாங்கத்தினால் பொது சேவை வழங்கலில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க டிஜிட்டல் கட்டண த்தளமான GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப் பட்டது.

இந்த முயற்சியின் மூலம், GovPay ஊடாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதியை செயல்படுத்தும் இலங்கையின் மூன்றாவது மாகாணமாக வட மாகாணம் திகழ்கின்றது

இவ் உத்தியோகபூர்வ நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. பொலீஸ் அத்தியட்சகர் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலீஸ்மா அதிபர் (DIG) திலக் சி ஏ தனபால, வன்னிப்பிரிவுக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் எச்.ஏ.கே.ஏ இந்திக்க ஹப்புகொட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் ஜே.ஏ சந்திரசேன, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் ஜி.எச் மாரப்பன. வவுனியா பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் [SSP) டபிள்யூ.ஏ சோமரத்ன ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் மன்னார் பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் (SSP) டபிள்யூ. கே.ஏ.ஜே எரிக் ரஞ்சித், சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் கிளிநொச்சி பிரிவு, ஜயந்த டி சில்வா; முல்லைத்தீவு பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் (SSP) எல்.ஏ.டி.ரத்னவிர யாழ்ப்பாணப் பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் [SSP] ஜே.பி.எஸ். ஜெயமஹா, மற்றும் காங்கேசன்துறை பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் [SSP) பி.எம்.ஆர் அம்பேபிட்டிய போக்குவரத்து அமைச்சின் டிஜிட்டல் செயலணியின் தலைவர் ஹர்ஷ புரசிங்க, லங்காபேயின் பிரதம நிறைவேற்று அதிகாரி சன்ன டி சில்வா மற்றும் வட மாகாணத்தின் ஆறு பொலீஸ் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 150 க்கும் மேற்பட்ட போக்குவரத்து பொலீஸ் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

அதேசமயத்தில், வட மாகாணத்தில் உள்ள 6 போக்குவரத்து பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பொலீஸ் உத்தியோகஸ்தர்களுக்கான தொடர் விழிப்புணர்வு அமர்வுகளும் நடைபெற்று வருகின்றது.

ஏப்ரல் 2025 இல் ஸ்தலத்திலான போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை அறிமுகப் படுத்தப்பட்டதிலிருந்து, GovPay வழியாக 23,539 ஸ்தல அபராதங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, இது ரூபா 31 மில்லியனுக்கும் அதிகமானதாகும்.

பெப்ரவரி 2025 இல் தொடங்கப்பட்ட GovPay என்பது இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay இன் ஒரு கூட்டு முயற்சியாகும். இது டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. GOVPAY போக்குவரத்து அபராதத் திட்டம் போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள டிஜிட்டல் பணிக்குழுவால் முன்னெடுக்கப்படுகிறது. பொதுமக்களை அரச சேவைகளுக்கான பணத்தினை ஒன்லைனில் மிகவும் இலகுவாகவும் பாதுகாப்பகவும் உரிய நேரத்தில் செலுத்த ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்க சேவை வழங்கும் திறனை மேம்படுத்துவதே இந்த தளத்தின் நோக்கமாகும்.

வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம் அரசாங்கத்தினால் பொது சேவை வழங்கலில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க டிஜிட்டல் கட்டண த்தளமான GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த முயற்சியின் மூலம், GovPay ஊடாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதியை செயல்படுத்தும் இலங்கையின் மூன்றாவது மாகாணமாக வட மாகாணம் திகழ்கின்றதுஇவ் உத்தியோகபூர்வ நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. பொலீஸ் அத்தியட்சகர் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலீஸ்மா அதிபர் (DIG) திலக் சி ஏ தனபால, வன்னிப்பிரிவுக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் எச்.ஏ.கே.ஏ இந்திக்க ஹப்புகொட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் ஜே.ஏ சந்திரசேன, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் ஜி.எச் மாரப்பன. வவுனியா பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் [SSP) டபிள்யூ.ஏ சோமரத்ன ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.மேலும் இந்நிகழ்வில் மன்னார் பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் (SSP) டபிள்யூ. கே.ஏ.ஜே எரிக் ரஞ்சித், சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் கிளிநொச்சி பிரிவு, ஜயந்த டி சில்வா; முல்லைத்தீவு பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் (SSP) எல்.ஏ.டி.ரத்னவிர யாழ்ப்பாணப் பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் [SSP] ஜே.பி.எஸ். ஜெயமஹா, மற்றும் காங்கேசன்துறை பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் [SSP) பி.எம்.ஆர் அம்பேபிட்டிய போக்குவரத்து அமைச்சின் டிஜிட்டல் செயலணியின் தலைவர் ஹர்ஷ புரசிங்க, லங்காபேயின் பிரதம நிறைவேற்று அதிகாரி சன்ன டி சில்வா மற்றும் வட மாகாணத்தின் ஆறு பொலீஸ் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 150 க்கும் மேற்பட்ட போக்குவரத்து பொலீஸ் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.அதேசமயத்தில், வட மாகாணத்தில் உள்ள 6 போக்குவரத்து பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பொலீஸ் உத்தியோகஸ்தர்களுக்கான தொடர் விழிப்புணர்வு அமர்வுகளும் நடைபெற்று வருகின்றது. ஏப்ரல் 2025 இல் ஸ்தலத்திலான போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை அறிமுகப் படுத்தப்பட்டதிலிருந்து, GovPay வழியாக 23,539 ஸ்தல அபராதங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, இது ரூபா 31 மில்லியனுக்கும் அதிகமானதாகும்.பெப்ரவரி 2025 இல் தொடங்கப்பட்ட GovPay என்பது இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay இன் ஒரு கூட்டு முயற்சியாகும். இது டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. GOVPAY போக்குவரத்து அபராதத் திட்டம் போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள டிஜிட்டல் பணிக்குழுவால் முன்னெடுக்கப்படுகிறது. பொதுமக்களை அரச சேவைகளுக்கான பணத்தினை ஒன்லைனில் மிகவும் இலகுவாகவும் பாதுகாப்பகவும் உரிய நேரத்தில் செலுத்த ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்க சேவை வழங்கும் திறனை மேம்படுத்துவதே இந்த தளத்தின் நோக்கமாகும்.

Advertisement

Advertisement

Advertisement