ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட டிப்பர் வண்டி மீது, லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
குடாகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறி, நிறுத்தி வைக்கப்பட்ட டிப்பர் வண்டியில் மோதியுள்ளதோடு, லொறியை செலுத்திய சாரதி மது போதையில் லொறியை செலுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் மது போதையில் லொறியை செலுத்திய சாரதி விபத்தினை ஏற்படுத்தும் சம்பவம் விபத்து ஏற்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட லொறியின் சாரதியை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதோடு சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மது போதையால் நேர்ந்த விபரீதம்; டிப்பரை மோதித் தள்ளிய லொறி. ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட டிப்பர் வண்டி மீது, லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்குடாகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறி, நிறுத்தி வைக்கப்பட்ட டிப்பர் வண்டியில் மோதியுள்ளதோடு, லொறியை செலுத்திய சாரதி மது போதையில் லொறியை செலுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.குறித்த பகுதியில் மது போதையில் லொறியை செலுத்திய சாரதி விபத்தினை ஏற்படுத்தும் சம்பவம் விபத்து ஏற்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட லொறியின் சாரதியை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதோடு சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.