• May 06 2026

ஸ்டேறிங் இறுகியதால் விபரீதம் - கட்டுப்பாட்டை இழந்த லொறி வடிகாணில் வீழ்ந்து விபத்து

Chithra / May 5th 2026, 1:11 pm
image

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள தோணா பகுதியில் வைத்து லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி ஆபத்துக்களின்றி தெய்வாதீனமான முறையில் உயிர்தப்பியுள்ளார்.


திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று செவ்வாய்கிழமை (05) காலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் குறித்து தெரியவருவதாவது-


மூதூரிலிருந்து திருகோணமலை நோக்கி பொதிகளை ஏற்றிக் கொண்டு குறித்த லொறியானது பயணித்துள்ளது. இதன்போது லொறியின் ஸ்டேறிங் இறுகியதன் காரணமாக சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. இதன்போது கட்டுப்பாட்டை இழந்த லொறி வடிகாணில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இவிபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.


சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


ஸ்டேறிங் இறுகியதால் விபரீதம் - கட்டுப்பாட்டை இழந்த லொறி வடிகாணில் வீழ்ந்து விபத்து திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள தோணா பகுதியில் வைத்து லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி ஆபத்துக்களின்றி தெய்வாதீனமான முறையில் உயிர்தப்பியுள்ளார்.திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று செவ்வாய்கிழமை (05) காலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து தெரியவருவதாவது-மூதூரிலிருந்து திருகோணமலை நோக்கி பொதிகளை ஏற்றிக் கொண்டு குறித்த லொறியானது பயணித்துள்ளது. இதன்போது லொறியின் ஸ்டேறிங் இறுகியதன் காரணமாக சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. இதன்போது கட்டுப்பாட்டை இழந்த லொறி வடிகாணில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இவிபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement