• Oct 07 2026

பாடசாலை செல்லும் வழியில் பரிதாபம்: 12 வயது மாணவனுக்கு நேர்ந்த சோகம்

Chithra / Oct 7th 2026, 11:57 am
image


ஹட்டன் – நோட்டன் பிரதான சாலையில் இன்று (07) காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்த


இந்த விபத்து இன்று காலை சுமார் 7.40 மணியளவில் ஒஸ்போன் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்றதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்தில் 12 வயதுடைய ஜெயராம் போல் ராஜ் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். 


இவர் நோட்டன் கணபதி வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயின்று வந்துள்ளார்.


குறித்த மாணவன் இன்று காலை தனது வீட்டிலிருந்து தனது துவிச்சக்கர வண்டியில் விமல் சுரேந்திர நகரை நோக்கி பயணித்துள்ளார்.


இதன்போது, பிரேக் இல்லாத நிலையில் துவிச்சக்கர வண்டி முன்னால் பயணித்த ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு சொந்தமான பேருந்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்தில் படுகாயமடைந்த மாணவன் டிக்கோயா–கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து நோட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


பாடசாலை செல்லும் வழியில் பரிதாபம்: 12 வயது மாணவனுக்கு நேர்ந்த சோகம் ஹட்டன் – நோட்டன் பிரதான சாலையில் இன்று (07) காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்தஇந்த விபத்து இன்று காலை சுமார் 7.40 மணியளவில் ஒஸ்போன் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்றதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் 12 வயதுடைய ஜெயராம் போல் ராஜ் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். இவர் நோட்டன் கணபதி வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயின்று வந்துள்ளார்.குறித்த மாணவன் இன்று காலை தனது வீட்டிலிருந்து தனது துவிச்சக்கர வண்டியில் விமல் சுரேந்திர நகரை நோக்கி பயணித்துள்ளார்.இதன்போது, பிரேக் இல்லாத நிலையில் துவிச்சக்கர வண்டி முன்னால் பயணித்த ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு சொந்தமான பேருந்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் படுகாயமடைந்த மாணவன் டிக்கோயா–கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து நோட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement