• Oct 07 2026

மரணக் கடிதத்தில் பரபரப்பு தகவல்...கிளிநொச்சி சிறுமிக்கு நடந்தது என்ன? வீதியில் இறங்கிய மக்கள்!

Chithra / Oct 7th 2026, 4:15 pm
image

  

கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் கடந்த முதலாம் திகதி 17 வயதான சசிதரன் சமரழகி என்ற சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி இன்று (07) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


உருத்திரபுரம் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கு நீதி வழங்க வேண்டும் எனவும், அவர் தனது கடிதத்தில் பெயர் குறிப்பிட்ட நபரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


உயிரிழப்பதற்கு முன்னர் சிறுமி எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில், தனது மரணத்துக்கு அயல் வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காரணம் எனவும், தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி தகாத உறவுக்கு அழைத்ததாகவும் குறிப்பிட்டிருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


பழைய மாவட்ட செயலக வளாகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர் பேரணியாக மாவட்ட செயலகம் வரை சென்றனர்.


இதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் நளாயினி இன்பராஜிடம் கையளித்தனர்.


இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.


மரணக் கடிதத்தில் பரபரப்பு தகவல்.கிளிநொச்சி சிறுமிக்கு நடந்தது என்ன வீதியில் இறங்கிய மக்கள்   கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் கடந்த முதலாம் திகதி 17 வயதான சசிதரன் சமரழகி என்ற சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி இன்று (07) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.உருத்திரபுரம் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கு நீதி வழங்க வேண்டும் எனவும், அவர் தனது கடிதத்தில் பெயர் குறிப்பிட்ட நபரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.உயிரிழப்பதற்கு முன்னர் சிறுமி எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில், தனது மரணத்துக்கு அயல் வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காரணம் எனவும், தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி தகாத உறவுக்கு அழைத்ததாகவும் குறிப்பிட்டிருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.பழைய மாவட்ட செயலக வளாகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர் பேரணியாக மாவட்ட செயலகம் வரை சென்றனர்.இதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் நளாயினி இன்பராஜிடம் கையளித்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement