• Jul 28 2025

100க்கும் அதிக பயணிகளுடன் தடம்புரண்ட ரயில் - 3பேர் பலி - 34 பேர் படுகாயம் ஜேர்மனியில் சம்பவம்!

shanuja / Jul 28th 2025, 8:30 am
image

ஜேர்மனியில் ரயில் ஒன்று தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன்  34 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஜேர்மனியின் தென்மேற்கு மாநிலமான பேடன்- வ்ரெட்டம்பேர்க்கில் சென்ற ரயிலே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. 


ரயிலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த வேளை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 


விபத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த  மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர. 


ரயில் தடம்புரண்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 34 பேர் படுகாயமடைந்தனர்.  படுகாயமடைந்த பயணிகள்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


விபத்தில் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதில் அருகிலுள்ள மரங்களுடன் மோதியதில் ரயில் பெட்டிகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.


கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ரயில் விபத்துக்கு காரணமா என்பது குறித்து அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்த சம்பவத்திற்கு ஜேர்மனி அதிபர் பிரீட்ரிச் மெர்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் பிபெராச் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது .  நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

100க்கும் அதிக பயணிகளுடன் தடம்புரண்ட ரயில் - 3பேர் பலி - 34 பேர் படுகாயம் ஜேர்மனியில் சம்பவம் ஜேர்மனியில் ரயில் ஒன்று தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன்  34 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் தென்மேற்கு மாநிலமான பேடன்- வ்ரெட்டம்பேர்க்கில் சென்ற ரயிலே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. ரயிலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த வேளை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த  மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர. ரயில் தடம்புரண்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 34 பேர் படுகாயமடைந்தனர்.  படுகாயமடைந்த பயணிகள்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதில் அருகிலுள்ள மரங்களுடன் மோதியதில் ரயில் பெட்டிகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ரயில் விபத்துக்கு காரணமா என்பது குறித்து அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு ஜேர்மனி அதிபர் பிரீட்ரிச் மெர்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் பிபெராச் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது .  நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement