• Nov 20 2024

கிளிநொச்சியில் உணவுப் பாதுகாப்பு வலையமைப்பு தொடர்பான பயிற்சிநெறி!

Chithra / Nov 20th 2024, 4:10 pm
image


கிளிநொச்சியில் உலக உணவுத் திட்டத்தின் கீழான உணவுப் பாதுகாப்பு தொடர்பான வலையமைப்பு பற்றிய இரு நாள் பயிற்சிநெறி இன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரனின் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் காலை 9:00 மணிக்கு நடைபெற்றது.

இந் நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் கலந்து கொண்டு குறித்த பயிற்சிநெறியை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த பயிற்சிநெறி 2ம் கட்டமாக நடைபெறுவதுடன், நாளைய தினம் கள பரிசீலனையும் நடைபெறவுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் ஒத்துழைப்பிற்கான கூட்டாண்மை செயலகத்தின் ஏற்பாட்டின் கீழ் உணவுப் பாதுகாப்பு வலையமைப்பு கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப் பயிற்சிநெறியில் உலக உணவுத் திட்ட அதிகாரிகள், யாழ். மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் விவசாய பணிப்பாளர், ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலிருந்தும் தலா 6 கிராம சேவையாளர்கள், விவசாய  துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சுகாதார மற்றும் கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள், புள்ளிவிவரவியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உத்தியோகத்தர்கள், திட்டமிடல் கிளை உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


கிளிநொச்சியில் உணவுப் பாதுகாப்பு வலையமைப்பு தொடர்பான பயிற்சிநெறி கிளிநொச்சியில் உலக உணவுத் திட்டத்தின் கீழான உணவுப் பாதுகாப்பு தொடர்பான வலையமைப்பு பற்றிய இரு நாள் பயிற்சிநெறி இன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது.கிளிநொச்சி மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரனின் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் காலை 9:00 மணிக்கு நடைபெற்றது.இந் நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் கலந்து கொண்டு குறித்த பயிற்சிநெறியை ஆரம்பித்து வைத்தார்.குறித்த பயிற்சிநெறி 2ம் கட்டமாக நடைபெறுவதுடன், நாளைய தினம் கள பரிசீலனையும் நடைபெறவுள்ளது.உலக உணவுத் திட்டத்தின் ஒத்துழைப்பிற்கான கூட்டாண்மை செயலகத்தின் ஏற்பாட்டின் கீழ் உணவுப் பாதுகாப்பு வலையமைப்பு கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இப் பயிற்சிநெறியில் உலக உணவுத் திட்ட அதிகாரிகள், யாழ். மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் விவசாய பணிப்பாளர், ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலிருந்தும் தலா 6 கிராம சேவையாளர்கள், விவசாய  துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சுகாதார மற்றும் கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள், புள்ளிவிவரவியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உத்தியோகத்தர்கள், திட்டமிடல் கிளை உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement