• Jun 01 2024

நீதிபதிகள், நீதவான்களுக்கு இடமாற்றம்!

Chithra / Dec 1st 2022, 10:51 am
image

Advertisement

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் 56 மேலதிக நீதவான்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த வருடம் இரண்டாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட கார்களை பாதுகாப்பாக பயன்படுத்தி மீண்டும் அமைச்சுக்கு வழங்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கும் நீதிச்சேவை ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிபதிகள், நீதவான்களுக்கு இடமாற்றம் வருடாந்த இடமாற்றத்தின் கீழ் நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் 56 மேலதிக நீதவான்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.அடுத்த வருடம் இரண்டாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.இதனிடையே, நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட கார்களை பாதுகாப்பாக பயன்படுத்தி மீண்டும் அமைச்சுக்கு வழங்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கும் நீதிச்சேவை ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement