• May 17 2024

நேரம் பார்த்து கொய்யா உண்ணுங்கள்! இல்லையென்றால் ஆபத்து நிச்சயம்!!!

crownson / Dec 1st 2022, 10:54 am
image

Advertisement

பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது.

இதனுடன் வைட்டமின் C, வைட்டமின் B, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. நூறு கிராம் கொய்யாவில் சுமார் முந்நூறு மில்லிகிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின்-C உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, கொய்யாவில் ஏராளமான பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் எனஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

கொய்யாவின் பயன்பாடு பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் கொய்யா நல்ல பங்கு வகிக்கிறது.

வயிறு மற்றும் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு கொய்யாவின் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கொய்யாவில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இதனால் செரிமானம், வயிற்றுக்கோளாறு பிரச்சனைகளுக்கு கொய்யாவை சாப்பிடலாம்.    சிலருக்கு கொய்யாவை விதையுடன் சாப்பிட்டால் வயிறு வலி வரலாம். அவர்கள் விதையை எடுத்துவிட்டு சாப்பிட வேண்டும்.

அதேசமயம் அளவுக்கு அதிகமாக கொய்யா சாப்பிட்டாலும் வயிறு வலி வரலாம்.நார்ச்சத்து நிறைந்த கொய்யா மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவுகிறது.

அதோடு செரிமானமும் மேம்படும். எனவேதான் மலச்சிக்கல் இருக்கும் போது கொய்யாவை சாப்பிட பல மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.

கொய்யாவை சாப்பிட்டால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை தீரும். ஏனெனில் கொய்யாவும் அமில தன்மை கொண்ட பழம்.

எனவே, கொய்யாவை உண்பதன் மூலம் வாயு வெளியேறுவது மிக எளிது. கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு நல்லது. உண்மையில், மூலத்திற்கு மிகப்பெரிய காரணம் மலச்சிக்கல். கொய்யா சாப்பிடுவதால் மலச்சிக்கலும் நீங்கும். அதோடு மூலமும் சரியாகலாம்.

மாலை அல்லது இரவில் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கொய்யாவை இரவில் சாப்பிடுவதால், அதன் செரிமானமும் சரியாக நடைபெறாது.

கொய்யாவை பகல் மற்றும் மதியம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை உட்கொள்வதால் அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

நேரம் பார்த்து கொய்யா உண்ணுங்கள் இல்லையென்றால் ஆபத்து நிச்சயம் பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது. இதனுடன் வைட்டமின் C, வைட்டமின் B, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. நூறு கிராம் கொய்யாவில் சுமார் முந்நூறு மில்லிகிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின்-C உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இது தவிர, கொய்யாவில் ஏராளமான பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் எனஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கொய்யாவின் பயன்பாடு பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் கொய்யா நல்ல பங்கு வகிக்கிறது.வயிறு மற்றும் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு கொய்யாவின் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொய்யாவில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இதனால் செரிமானம், வயிற்றுக்கோளாறு பிரச்சனைகளுக்கு கொய்யாவை சாப்பிடலாம்.    சிலருக்கு கொய்யாவை விதையுடன் சாப்பிட்டால் வயிறு வலி வரலாம். அவர்கள் விதையை எடுத்துவிட்டு சாப்பிட வேண்டும். அதேசமயம் அளவுக்கு அதிகமாக கொய்யா சாப்பிட்டாலும் வயிறு வலி வரலாம்.நார்ச்சத்து நிறைந்த கொய்யா மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவுகிறது. அதோடு செரிமானமும் மேம்படும். எனவேதான் மலச்சிக்கல் இருக்கும் போது கொய்யாவை சாப்பிட பல மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். கொய்யாவை சாப்பிட்டால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை தீரும். ஏனெனில் கொய்யாவும் அமில தன்மை கொண்ட பழம். எனவே, கொய்யாவை உண்பதன் மூலம் வாயு வெளியேறுவது மிக எளிது. கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு நல்லது. உண்மையில், மூலத்திற்கு மிகப்பெரிய காரணம் மலச்சிக்கல். கொய்யா சாப்பிடுவதால் மலச்சிக்கலும் நீங்கும். அதோடு மூலமும் சரியாகலாம்.மாலை அல்லது இரவில் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கொய்யாவை இரவில் சாப்பிடுவதால், அதன் செரிமானமும் சரியாக நடைபெறாது. கொய்யாவை பகல் மற்றும் மதியம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை உட்கொள்வதால் அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

Advertisement

Advertisement

Advertisement